செங்கல்பட்டு - திண்டிவனம் டிராபிக் தொல்லைக்கு முடிவு.. ரூ.2500 கோடியில் 6 வழிச்சாலை! எப்போது ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் டிராபிக்கை பற்றி வாகன ஓட்டிகளுக்கு நன்றாகவே தெரியும்.. அதிலும், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் இந்த சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும்... இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே முக்கியமான மாற்றம் வரப்போகிறது.

சென்னை - கன்னியாகுமரி இடையிலான ஜி.எஸ்.டி. சாலை தமிழகத்தின் முக்கியமான சாலைகளில் ஒன்று. இப்போது இந்தச் சாலை 4 வழிச்சாலையாக உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

Chengalpattu

நெரிசல் அதிகம்

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். இந்த டிராபிக்கை குறைக்க சென்னை - கன்னியாகுமரி சாலையைப படிப்படியாக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

8 வழிச்சாலை திட்டம்

சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் விஜய்யும், இந்தச் சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தற்போது செங்கல்பட்டு - திண்டிவனம் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஆமாம், செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் வரையிலான 68 கி.மீ. தூர சாலையை 4 வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால், முதலில் இங்கு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பணி முடிந்த பிறகு சென்னை - கன்னியாகுமரி சாலையின் மற்ற பகுதிகளிலும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.

68 கிமீ தூரம் - ரூ.2,500 கோடி

இந்த 68 கி.மீ. சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ.2,500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கெனவே தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போது தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்களாம்.. இந்த ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எப்போது தொடங்கும் - பிளஸ் பாயிண்ட்ஸ்

அதுமட்டுமல்ல சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் முதலில் முடிக்கப்பட்டு, அதன் பிறகுதான் செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான 6 வழிச்சாலை விரிவாக்கப் பணி தொடங்கும் என்கிறார்கள்.. அதாவது, முதலில் 68 கி.மீ. தூரத்துக்கு இந்தப் பணி மேற்கொள்ளப்படும். அது முடிந்த பிறகு மற்ற பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் படிப்படியாக நடக்கும் என்று அதிகாரிகள் உறுதி கூறுகிறார்கள்..

அதிகாரிகள் இப்படியொரு தகவலை சொல்லிவிடவும், வாகன ஓட்டிகள் மத்தியில் இப்போதே ஆர்வம் எழுந்துள்ளது. காரணம், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே 6 வழிச்சாலை அமைந்தால், சென்னையில் இருந்து விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும். சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை குறைய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையலாம். இதனால் பயண நேரமும் மிச்சமாகும். எரிபொருள் செலவும் குறையலாம்.. சாலைப் பயணம் சீராகும்போது விபத்துகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்க முடியும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+