தேனிக்கு மத்திய அரசு நல்ல செய்தி.. திண்டுக்கல்-குமுளி இடையே நான்கு வழிச்சாலை உறுதி

Subscribe to Oneindia Tamil

தேனி: திண்டுக்கல்-குமுளி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் 28 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக உப்புக்கோட்டை, பூதிப்புரம், கெங்குவார்பட்டி, டி.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, காமாட்சிபுரம், எண்டப்புளி, தாமரைக்குளம், மேல்மங்கலம், வடவீரநாயக்கன்பட்டி, ஊஞ்சாம்பட்டி, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உத்தமபாளையம், கீழக்கூடலூர், சின்னமனூர், கம்பம் போன்றவை இடம் பெற்றுள்ளன.

Dindigul Kumily Theni

தமிழ்நாட்டில் இருவழிச்சாலைகளாக இருந்தாலும் சில பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைதுறை கட்டணம் வசூலிக்கிறது என்றால், அது தேனி மாவட்டமும் ஒன்று. தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் குமுளி சாலையில் இரண்டு இடத்தில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் நாளே வத்தலக்குண்டு சுங்கச்சாவடியை மக்கள் அடித்து நொறுக்கியதால், அது இன்று வரை செயல்படவில்லை. ஆனால் சின்னமனூர் அருகே செயல்படுகிறது. இந்த சுங்கச்சாவடிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏனெனில் நான்கு வழிச்சாலையே அமைக்காமல் சுங்கச்சாவடி அமைத்தது தவறு என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மூணாறு, சபரிமலை சாலை

அதுமட்டுமல்ல, திண்டுக்கல் குமுளி சாலை என்பது, கேரளாவின் முக்கியமான சாலை, இந்த சாலை வழியாகவே சபரிமலை, வாகமன், தேக்கடி, மூணாறு, இடுக்கி, கட்டப்பணை, கோட்டயம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு போக முடியும். இது வெறும் இரண்டு வழிச்சாலையாகே இருக்கிறது. முன்னதாக பல ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல்-குமுளி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இருவழிச்சாலை

ஆனால் இடையில் மத்திய அரசு என்ன நினைத்ததோ தெரியவில்லை. நான்கு வழிச்சாலை அமைக்கும் நடவடிக்கை கைவிட்டது. அதேநேரம் விரிவுபடுத்தப்பட்ட இருவழிச்சாலையாக அமைத்தது. திண்டுக்கல்-குமுளி இடையே சுமார் 138 கி.மீ. தூரத்துக்கு இந்த சாலை அகலப்படுத்தப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டத்தில் பல இடங்களில் நெரிசலுக்கு தீர்வு காணும் புறவழிச்சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையிலும் தற்போத வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சபரிமலை சீசன் காலங்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. கொடைக்கானல், மூணாறு,சபரிமலை செல்பவர்கள் இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள்.

மத்திய அரசு குட்நியூஸ்


எனவே, இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் குமுளி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தேசிய நெடுஞ்சாலை 183-ல் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசிதழ் அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் நியமனம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அரசிதழில், தேசிய நெடுஞ்சாலை 183-ல் 2.75 கி.மீ. முதல் 136.543 கி.மீ. வரையிலான சாலைப் பகுதிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

28 கிராமங்கள்

இதில் தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம், தேனி, உத்தமபாளையம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட சுமார் 28 வருவாய் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக உப்புக்கோட்டை, பூதிப்புரம், கெங்குவார்பட்டி, டி.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, காமாட்சிபுரம், எண்டப்புளி, தாமரைக்குளம், மேல்மங்கலம், வடவீரநாயக்கன்பட்டி, ஊஞ்சாம்பட்டி, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உத்தமபாளையம், கீழக்கூடலூர், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நிலம் சிக்கல் இல்லை

சுற்றுலாவை மையமாக கொண்டு உள்ள தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தேனி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்காக ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டிருப்பதால், நிலம் கையகப்படுத்துவதில் பெரிய சிக்கல் வர வாய்ப்பு இல்லை.. சில இடங்களில் தாhன நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. தேனி மாவட்டத்தில் கெங்குவார்பட்டி முதல் லோயர்கேம்ப் வரை சுமார் 90 கி.மீ. தூரம் பணிகள் நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 138 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை ஆகப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+