பிக் பாஸ் முத்துக்குமரன் மீது BNS 69 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு.. வாஹிதா புகாரின் எதிரொலி.. பின்னணி தகவல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவருக்கும் சமூக வலைதள பிரபலமான வாஹிதாவுக்கும் கடந்த சில வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சனை இப்போது காவல்துறை வழக்கு வரை சென்று இருக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக வாஹிதா வைத்த குற்றசாட்டுகளின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் 69 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் முத்துக்குமரனை ஏற்கனவே தெரிந்திருக்கும். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே பட்டிமன்றங்களில் பேசுவும், சோசியல் மீடியாக்களில் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் பலருக்கும் பரீட்சையமாக இருந்தார். இப்படி இருக்கும் போது, வாஹதா என்ற சோசியல் மீடியா பிரபலம் முத்துக்குமரனால் தான் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோக்கள் வெளியிட்டது அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்தது.
வாஹதா வெளியிட்ட வீடியோ
அதற்குப் பிறகு தொடர்ந்து முத்துக்குமரன் பற்றி வாஹதா வீடியோ வெளியிட்டு கொண்டே இருக்கிறார். முதல் சந்திப்பின்போது, தன்னை பிடித்திருப்பதாகவும், தாலி கட்டி திருமணம் செய்து கொள்வதாக முத்துக்குமரன் கூறியதாக வாஹதா குற்றம் சாட்டியிருக்கிறார். இதை நம்பி தான் அவருடன் நெருக்கமாக பழகியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த பிரச்சனை முதலில் சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியான போது பெரிய அளவில் பேசப்பட்டது.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு உடல் ரீதியாக நெருக்கமாக பழகிவிட்டு பின்னர் திருமணம் செய்ய மறுக்கிறார் என்பது தான் வாஹதாவின் குற்றச்சாட்டு. ஆனால் முத்துக்குமரன், "எங்களுக்கும் காதல் உறவு இல்லை. அவர் வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் கட் பண்ணி சேர்க்கப்பட்ட வீடியோக்கள்" என்று போஸ்ட் போட்டு அதை டெலிட் செய்திருந்தார். பிறகு, வாஹதா தன்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
வாஹதா கொடுத்த கம்ப்ளைன்ட்
ஆனால் முத்துக்குமரன் கொடுத்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை அதனால் நீங்கள் நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு வாஹதா முத்துக்குமரன் மீது புகார் கொடுத்திருந்தார். அதில், "முத்துக்குமரன் தான் செய்த தவறை ஒத்துக்கொண்டு தன்னுடன் தாலி கட்டி வாழவேண்டும். இல்லை என்றால் ஜெயிலுக்கு போக வேண்டும்" என்று கூறியிருந்தார்.
முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு
இந்த வழக்கில் இப்போது முத்துக்குமரன் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் BNS 69 ஆவது பிரிவின்கீழ் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற முத்துக்குமரனை சுற்றி இப்படி ஒரு சட்ட பிரச்சனை உருவாகி இருப்பது அவருடைய ரசிகர்களிடமும் பேசு பொருளாகி இருக்கிறது. இனி இந்த வழக்கில் காவல்துறை விசாரணை என்ன முடிவுக்கு வருகிறது? முத்துக்குமரன் தரப்பில் அடுத்ததாக என்ன விளக்கம் வெளியாகிறது? என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.



Click it and Unblock the Notifications
