கார்த்திகை மாத பலன் 2026: மீன ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம்.. யோகம் தரும் ராகு கேது
கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மீன ராசி பலன்
மீனம் ராசியினருக்கு மிகப்பெரிய நல்ல தொழில் முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். 40, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் மாதம். தர்மகர்மாதிபதி யோகம், கேள யோகத்துடன் அமையும். இதுவரைக்கும் 12, 6 இல் இருந்த ராகு கேது 5, 11 இல் வருகின்றனர். அந்த ராகு கேது பெயர்ச்சியும் நல்ல சாககமான அமைப்பாக இருக்கும்.
நல்ல மாற்றம்
ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கக் கூடிய தன்மையில் இருக்கும். ஜென்மசனியில் பாதிக்கப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்திருப்பீர்கள். இளைஞர்களுக்கு பெரிய பாதிப்புகள் இருந்திருக்கும். குறிப்பாக, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு எந்தவிதத்திலும் நல்லவை நடக்கவில்லை. 40, 50 வயதிற்கு மேற்பட்ட நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் இருந்து நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
எதையும் சமாளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லாவற்றிலும் நன்மைகள் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த தொல்லைகள் விலகும். இளைய பருவத்தினருக்கு குறிப்பாக உத்திரட்டாதி நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும்.
யோகம் கொட்டும்
மீன ராசியினருக்கு நல்ல காலம் ஆரம்பமாகிவிட்டது. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இப்போது 6 ஆம் இடத்தில் சேர்ந்திருக்கும் செவ்வாய், கேது, குரு மற்றும் தர்மகார்மதிபதி யோகம், குரு கேள யோகத்தில் இருக்கிறார். கார்த்திகை மாதம் 20 ஆம் நாளில் கடனைத் தீர்க்கும் யோகம் ஏற்படும். தொழிலை முன்னேற்றக்கூடிய அமைப்பு ஏற்படும்.
சிலருக்கு கட்டட யோகம் உண்டாகும். வீடு கட்டும் அமைப்பு உள்ளது. ஏதாவதொரு கடன்களால் நல்லவை நடக்கும் அமைப்பு. புதிய கடனை வாங்கி சிலர் பழைய கடனை அடைப்பீர்கள். எந்த வீட்டில் ஜென்ம சனியும், அஷ்டம சனியும் சேர்ந்து கணவன், மனைவி குழந்தைகளாக இருக்கிறீர்களோ அங்கு பொருளாதார முன்னேற்றங்கள் பெரிய அளவில் இருந்திருக்காது. இப்போது அந்த இடங்களில் பெரிய மாற்றமும், முன்னேற்றமும் வரக்கூடிய அமைப்பு ஏற்படும்.
ஒளி பிறக்கும்
வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஜென்மசனி அமைப்பு நிரந்தரமாக விலகும். அதற்குப் பிறகு இரண்டரை வருடம் ஏழரை சனி தொடர்ந்தாலும் பெரிய கஷ்டம் ஏற்படாது. ஒளி பிறக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, நல்லவைகள் நடக்கும். இதுவரை இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கும். வியாபாரிகளுக்கு கையில் பணம் நிற்கும்.


Click it and Unblock the Notifications
