"19 வருட பழைய போட்டோ".. AI செய்த மேஜிக். 5 ஆண்டுகளாக தேடப்பட்ட பெண்ணை கண்டுபிடித்த உ.பி போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: வீட்டில் திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடக்க திடீரென்று மாயமானார் அந்த பெண். 5 ஆண்டுகளாக காணாமல் போன நிலையில் 19 ஆண்டுக்கு முன்பு எடுத்த போட்டோவை பயன்படுத்தி ஏஐ உதவியுடன் அவரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஏஐ எப்படி உதவியது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

uttar-pradesh-police-traced-woman-who-missing-after-5-years-with-a-help-of-ai-using-19-year-old-phot

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் கிஸ்மத் தேவி. இவர் கடந்த ஜூலை மாதம் பாபனி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ''கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மகள் மஞ்சு கார்வார் திடீரென்று மாயமானார். அப்போது அவவருக்கு 25 வயது ஆனது. அவர் இன்று வரை கிடைக்கவில்லை.

என்னுடைய மகளுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இது பிடிக்காமல் அவர் வீட்டை விட்டு சென்றார். அவரை எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தான் அழைத்து சென்றார். அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்'' என்று புகாரளித்தார்.

இந்த புகாரை வாங்கி போலீசார் அவரது மகளை அடையாளம் காணும் வகையில் போட்டோ ஏதுவும் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டனர். அதற்கு கிஸ்மத் தேவி, சமீபத்தில் எடுத்த போட்டோ எதுவும் இல்லை என்று கூறியதோடு, 2007 ம் ஆண்டில் பள்ளி பருவத்தில் எடுத்தபோட்டோ இருப்பதாக கூறினார். அந்த போட்டோவை வைத்து மாயமான பெண்ணின் அடையாளத்தை காண்பது சிரமமாக இருந்தது. இதனால் மஞ்சு கார்வார் பற்றிய விவரத்தை போலீசாரால் சேகரிக்க முடியவில்லை.

இதையடுத்து போலீசார் ஏஐ உதவியை நாடினர். மஞ்சு கார்வாரின் பள்ளி பருவ போட்டோவை ஏஐ-யில் கொடுத்து 18 ஆண்டுகள் கழித்து அவர் இப்போது எப்படி இருப்பார்? என்பது பற்றிய விவரங்களை கேட்டனர். அதற்கு ஏஐ புதிய போட்டோ ஒன்றை உருவாக்கி இப்படித்தான் இருப்பார் என்று வழங்கியது. அந்த போட்டோவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த ஏஐ போட்டோவை வைத்து போலீசார் விசாரித்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மஞ்சு கார்வாரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி சோன்பதரா எஸ்பி அபிசேக் வர்மா கூறுகையில், ''மஞ்சு வாரியார் ராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு திருமணமாகி கணவன், 2 குழந்தைகள் உள்ளனர்'' என்றார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில், ''மஞ்சு கார்வார் தொடர்பான ஏஐ போட்டோவை உருவாக்கி தேடி வந்தோம். அக்டோபர் 16ம் தேதி அவர் ராஜஸ்தானின் சாரு மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று விசாரணை நடத்தி அவரை மீட்டோம். மஞ்சு கார்வாருக்கு திருமணம் முடிந்துவிட்டது. கணவர் பெயர் உமேந்திரா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்'' என்றனர்.

மஞ்சு கார்வாரை கண்டுபிடிக்க ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட போட்டோ தான் உதவியது. இந்த போட்டோவை கான்ஸ்டபிள் விஜய் பாண்டே தான் உருவாக்கினார். இதனால் அவரை பாராட்டி அவருக்கு மாநில டிஜிபி சார்பில் ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் மாவட்ட எஸ்பி சார்பில் ரூ.2,100 ஆகியவை வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+