ராஜஸ்தான் கோயிலில் கொச கொசன்னு 25000 எலிகள் இருக்காம்! ஆனால் கண்ணுக்கே தெரியாது! தங்க எலி காணிக்கை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானேர் நகரில் உள்ள கர்ணி மாதா கோயிலில் 25 ஆயிரம் எலிகள் வசிக்கின்றன. இந்த கோயில் வளாகம் முழுவதுமே எலிகளால் நிரம்பியிருக்கும். இந்த எலிகளுக்கு பால் உணவாக வழங்கப்படுகிறது. இந்த கோயிலின் பாரம்பரியம் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும், பூஜை முறைகளும், வணங்கும் முறைகளும் மாறுபடும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் தேஷ்னோக் என்ற ஊரில் கர்ணி மாதா கோயில் உள்ளது.

rats

இந்த கோயில் துர்க்கை அம்மனின் அவதாரமாக கருதப்படும் 14 ம் நூற்றாண்டு பெண் துறவியான "கர்ணி மாதா"வுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோயில்களுக்குள் புறாக்கள், கிளிகள், தேனீக்கள், எறும்பு உள்ளிட்டவை இருக்கும். அது போல் கோயிலின் தோட்ட பகுதிகளில் பாம்பு உள்ளிட்டவை கூட இருக்கும் என்பார்கள்.

25 ஆயிரம் எலிகள்

ஆனால் இந்த கர்ணி மாதா கோயிலில் எலிகள் குடியிருக்கின்றன. இவை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த எலிகள் கோயில் வளாகம் முழுவதும் எந்த பயமும் இல்லாத உள்ளன. இவற்றை உள்ளூர் மக்கள் கபாக்கள் என அழைக்கிறார்கள்.

ஏன் அகற்றவில்லை?

ஏன் இத்தனை எலிகள் இருந்தும் அவற்றை கோயில் நிர்வாகம் அகற்றாமல் இருக்கிறது என்பதற்கும் ஒரு புராண கதை உள்ளது. மாதாவின் வளர்ப்பு மகனான லட்சுமணன் கபில் சர் என்ற ஆற்று நீரில் மூழ்கி இறந்தாராம். அவரை காப்பாற்ற கர்ணி மாதா எமதர்மராஜாவிடம் மகனை திருப்பி கொடுக்குமாறு வரம் கேட்டாராம்.

கர்ணி மாதா

அதற்கு கர்ணி மாதாவின் ஆண் வம்சாவளியினர் அனைவருமே எலிகளாகவே மறுபிறவி எடுப்பார்கள் என்ற வரம் கிடைத்ததாம். எனவே கோயிலில் உள்ள எலிகள் எல்லாம் கர்ணி மாதாவின் வாரிசுகளாக கருதப்படுகின்றன.

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் எலிகளுக்கு பால், இனிப்புகள், போன்ற நெய்வேத்தியங்களை வழங்குகிறார்கள். அதற்கென ஒரு பெரிய பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் பால், ஸ்வீட் உள்ளிட்டவைகளை வைக்கிறார்கள். அவற்றை எலிகள் உண்கின்றன.

எலி உண்ட மிச்ச பாலை நாம் உண்டு வாழ்ந்து வந்தால்..

எலி சாப்பிட்ட மிச்சம் வைத்த உணவை பக்தர்கள் சாப்பிட்டால் அதிர்ஷ்டம் என்கிறார்கள். அது புனித தீர்த்தம் என்றும் கருதுகிறார்கள். இங்கு வெள்ளை நிற எலிகளை காண்பது கர்ணி மாதாவையும் அவரது மகன்களையும் நேரில் பார்த்ததாக ஐதீகம் என்கிறார்கள்.

எலியை கொன்றால்..

ஒரு வேளை தவறுதலாக ஏதாவது ஒரு எலியை கொன்றுவிட்டால் அதற்கு பரிகாரமாக தங்கத்தினால் ஆன எலி உருவத்தை வைக்கிறார்கள். பிகானேர் மகாராஜா கங்கா சிங் என்பவரால் 20 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது.

இது பளிங்கு, வெள்ளி வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. பிகானேர் பகுதியில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. தேஷ்னோக் ரயில் நிலையத்தில் இருந்து 42 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு செல்ல எந்தவிதமான நுழைவு கட்டணங்களும் இல்லை. இந்த கோயில் எலிகள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் ஆண்டுதோறும் திறந்திருக்கும்.

இங்கு நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த எலிகளை நம்மால் எல்லா நேரங்களிலும் காண முடியாது. கர்ணி மாதாவின் அருள் இருந்தால் மட்டுமே காண முடியும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+