திருப்பத்தூர் மாலினி.. 2 ஆண் நண்பர்களுடன் பழக்கம்.. தனிப்படையில் சிக்கிய தவெக நிர்வாகி சஞ்சீவ் காந்தி
வேலூர்: திருப்பத்தூர் இரட்டைக் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 17 வருடங்களுக்கு முன்பு திருமணம், 2 குழந்தைகள், பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பழக்கம் என மாலினியின் குடும்பப் பின்னணி ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணையில் பல தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. தனிப்படை போலீசாரிடம் சிக்கிய தவெக நிர்வாகி சஞ்சீவ் காந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அப்படி என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி பகுதியிலுள்ள தனியார் பிளாட் அருகே ஒரு மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே ஆண், பெண் இருவர் ரத்த வெள்ளத்தில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர்.

திருப்பத்தூர் தம்பதி
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி, அருகிலிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே, டிஎஸ்பி முரளி ஆகியோரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போதுதான் கொலை செய்யப்பட்ட பெண் திருவண்ணாமலை மாவட்டம் திருவிக.நகர் பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகள் மாலினி (31) என்பது தெரியவந்தது.. இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் மகன் சிரஞ்சீவிக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தையும், 11 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
மாலினிக்கு 2 ஆண் நண்பர்கள்
எனினும், மாலினிக்கும் சஞ்சீவ் காந்தி என்பவருடன் தவறான உறவு இருந்து வந்துள்ளது.. அவர்கள் 2 பேரும் ஸ்கூல் படிக்கும்போதே நட்பாக பழகி வந்துள்ளார்கள்.. நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது.
ஆனால், மாலினியின் கள்ளக்காதல் சஞ்சீவ் காந்தியுடன் முடியவில்லை.. திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் பகுதியை சேர்ந்த ரஞ்சித்துடனும் மாலினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சித், மாலினிக்கு அக்கா முறை உறவினர் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கிடையேயான பழக்கமும் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது.
துடிதுடித்த இறந்த கள்ளக்காதல் ஜோடி
இந்த நிலையில், சம்பவத்தன்று மாலினியும், 2வது கள்ளக்காதலன் ரஞ்சித்தும் தோரணம்பதி பகுதியில் உள்ள தனியார் பிளாட்டில் தனியாக பேசிக் கொண்டிருந்தார்களாம்.. அப்போது அங்கு வந்த முதல் கள்ளக்காதலன் சஞ்சீவ் காந்தி, மாலினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரஞ்சித், இருவருக்கும் இடையிலான தகராறை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் காந்தி, ரஞ்சித்தை தலை, கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு மாலினியையும் தலை, கழுத்து, கை, மார்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியிருக்கிறார். இதில் மாலினியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பிறகு சஞ்சீவ் காந்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிப்படை கைது - தவெக நிர்வாகியா?
இதையடுத்து, இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் டிஎஸ்பி முரளி தலைமையில் தனிப்படை அமைத்தனர். தப்பியோடிய நபரை தேடி வந்த தனிப்படை போலீசார், திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சஞ்சீவ் காந்தியைப் பிடித்தனர். அவரிடம் இப்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கைதாகி உள்ள சஞ்சீவ் காந்தி, தவெகவை சேர்ந்த நிர்வாகி என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.. இந்நிலையில், திருப்பத்தூர் இரட்டைக் கொலை வழக்கில் கைதான சஞ்சீவ் காந்தியும் தவெக நிர்வாகி எனக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்தச் சம்பவம் தவெகவுக்கு மேலும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது..!!




Click it and Unblock the Notifications
