திருப்பத்தூர் அண்ணா சிலைக்கு முத்தம் வைத்த போதை ஆசாமி.. காதில் என்ன ரகசியம் சொன்னார்?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அண்ணா சிலையின் காதருகே சென்று ரகசியம் பேசுவது, பிறகு கன்னத்தில் முத்தமிடுவது என போதை ஆசாமி ஒருவர் செய்த செயல், அப்பகுதி மக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அண்ணா சிலையிடம் அப்படி என்ன ரகசியம் சொன்னார் என்ற கேள்வியுடன் இந்த வீடியோ, இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் சிவகங்கை செல்லும் சாலையில் பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் பீடத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் வந்த நபர் ஒருவர் திடீரென ஏறியுள்ளார்.

Tirupattur Anna Statue Viral Video Tamil Nadu News

அண்ணா சிலையில் காதில் ரகசியம்

அதன்பிறகு சிலையின் அருகே சென்ற அவர், அண்ணாவின் காதில் ஏதோ முக்கியமான விஷயத்தைச் சொல்வது போல சிலையின் காதருகே சென்று கிசுகிசுத்துள்ளார். யாரிடமோ ரகசியமாக பேசுவது போல அவரது செயல் இருந்துள்ளது.

அத்துடன் நிற்காமல், அண்ணா சிலையின் கன்னத்தில் மிகுந்த பாசத்துடன் முத்தமிட்டுள்ளார். ஏதோ தனது மனதில் உள்ளதை அண்ணாவிடம் சொல்லிவிட்ட நிம்மதியில் இருப்பது போல அவரது நடவடிக்கை இருந்துள்ளது.

வைரலான வீடியோ

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் போதை ஆசாமியின் இந்த வித்தியாசமான செயலைப் பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். உடனே சிலர் தங்களது செல்போன்களில் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.. பிறகு அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ வேகமாக பரவி, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

நெட்டிசன்கள் கேள்வி

பொதுவாக அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, மரியாதை செலுத்துவது போன்றவற்றைத்தான் பார்த்திருப்போம். ஆனால், இங்கே ஒருவர் சிலையின் காதில் ரகசியம் பேசிவிட்டு, கன்னத்திலும் முத்தமிட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனால், "அண்ணா சிலையிடம் அப்படி என்ன ரகசியம் சொல்லியிருப்பார்?" என்று நெட்டிசன்கள் கிண்டலாகவும் கேலியாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் போதையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 9 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்களுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.

அதைவிட முக்கியமாக, இந்த கொலை சம்பவங்களில் பெரும்பாலானவை போதையின் பின்னணியில் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலையும் அதிகரித்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+