மகள் பிறந்தநாளில் பிரேம்ஜி செய்த சேட்டை.. சந்தோஷத்தில் கங்கை அமரன்.. கலாய்த்த வெங்கட் பிரபு
சென்னை: நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என்று பல முகத்தை கொண்டிருக்கும் பிரேம்ஜி, நான் இப்போ சிறந்த தந்தை என்று நிரூபிக்கிற மாதிரி தன்னுடைய மகளின் பிறந்த நாளில் க்யூட்டாக செய்த சேட்டைகள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளில் அவரும் ஒரு குழந்தை போல துள்ளி குதித்து தன்னுடைய தந்தைக்கு கேக் ஊட்டி மகிழ்ந்திருக்கிறார். அப்போது பக்கத்தில் இருந்த அவருடைய அண்ணனான வெங்கட் பிரபு தம்பியை கலாய்த்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேம்ஜி வீட்டு பங்க்ஷன்
நாங்க எல்லாம் கல்யாணமே பண்ணிக்க மாட்டோம், "முரட்டு சிங்கிள்ஸ்" என்று பல வருடங்களாக சுற்றி திரிந்த பிரேம்ஜி, கடந்த 2024 ஆம் வருடம் தன்னைவிட 22 வயது சின்ன பொண்ணான இந்துவை காதலிக்கு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான போது பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், ஒரு சிலர் இதை வைத்தே விமர்சித்தனர்.
இந்துவின் வருத்தம்
இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை வைத்து, இவர்கள் கல்யாணம் எல்லாம் ரொம்ப நாட்கள் நினைக்காது என்று விமர்சித்து வந்தனர். ஆனால் பேசுறவங்க என்ன வேணாலும் பேசிட்டு போங்க, நாங்க அதை எல்லாம் கண்டுக்கவே மாட்டோம் என்று பிரேம்ஜி, இந்து தம்பதி தங்களுடைய வாழ்க்கையை ஜாலியாகவே கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். ஒரு பேட்டியில் இந்து பேசுகையில், "நான் பிரேம்ஜியை காதலித்து திருமணம் செய்தது என்னுடைய சொந்த தம்பிக்கு பிடிக்காது. அதனால அவர் என் கூட பேசவே மாட்டாரு" என்று ஃபீல் பண்ணி பேசி இருந்தார்.
கங்கை அமரன் பேச்சு
அப்படி இந்து குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பிரேம்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜி தன்னுடைய மொத்த சந்தோஷமே எனது குடும்பம் தான் என்று மனைவி மற்றும் மாமியாருடன் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். பிரேம்ஜி மாமியார் மசாலா என்று ஒரு பிராண்டை உருவாக்கி சமையல் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். என்ன தான் இசை அமைப்பாளர், பாடகர், நடிகர் என்று பல திறமை பிரேம்ஜிக்கு இருந்தாலும் இப்போது அவர் எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டு, மனைவி, பிள்ளை என்று வாழ்ந்து வருவது தான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று கங்கை அமரன் கூட சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கின்றார்.
பிரேம்ஜி குழந்தையின் பிறந்தநாள்
இப்படி இருக்கும் போது, நேற்று பிரேம்ஜி இந்து தம்பதி தங்களின் மகள் முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள். இதுவரைக்கும் தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த பிரேம்ஜி நேற்றுதான் முதல் முறையாக தனது மகளின் முகத்தை இணையத்தில் காட்டி இருக்கிறார். அதுபோல தனது மகளின் பெயர் "வராஹி" என்றும் அறிவித்திருக்கிறார். அதுபோல இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரேம்ஜியின் அப்பாவான கங்கை அமரன், அண்ணன் வெங்கட் பிரபுவும் கலந்து கொண்டனர்.
கிண்டல் செய்த வெங்கட் பிரபு
அப்போது குழந்தைக்கு ஹாப்பி பர்த்டே பாட்டு பாடி கேக் வெட்டி இருந்தனர். கேக்கை பிரேம்ஜி எடுத்து முதலில் தனது குழந்தைக்கு ஊட்டி விட்டு, பிறகு தனது அப்பாவுக்கு ஊட்டி விடுகிறார். அதை தொடர்ந்து அண்ணனுக்கு ஊட்டி விடுகிறார். கடைசியாக தனது மாமியாருக்கு ஊட்டி விடுகிறார். ஆனால் அவர் ஊட்டி விட்ட ஸ்டைலை பார்த்து, வெங்கட் பிரபு கிண்டல் செய்து இருக்கிறார். நீ கேக் ஊட்டுறியா? இல்ல இந்தா வச்சிக்க என்று கொடுக்கிறியா? என்று கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரீல்ஸ் வீடியோக்களில் மாமியாருக்கு பயப்படும் மருமகன் போல நடித்துவிட்டு நிஜத்தில் கேக் கூட இப்படி கொடுக்கறீங்களே பாஸ் என்று நெட்டிசன்கள் இவரை கிண்டல் செய்கின்றனர்.




Click it and Unblock the Notifications
