விஜய் முதல்வர் ஆனது பிளான் தான்.. ரகசியங்களை உடைத்த பிரேம்ஜி போஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான இந்த நிலையில், நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்ப அரசியல் முயற்சியிலேயே இத்தகைய முன்னிலை கிடைத்திருப்பது பெரிய அரசியல் மாற்றத்துக்கான சைகையாக பார்க்கப்படுகிறது.

திரிஷா நேரில் சந்தித்து வாழ்த்து
இந்த சூழலில், முன்னணி நடிகையான திரிஷா, விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். விஜய் திரிஷா பற்றி பல வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் சமயத்தில் விஜய் வீட்டிற்கு நேரடியாக சென்று த்ரிஷா வாழ்த்தியிருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருப்பதி கோவிலில் விஜய்க்காக பிரார்த்தனை செய்ததாக முன்பே ரசிகர்கள் கூறி வந்த நிலையில், அந்த நம்பிக்கை பலித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
குஷ்பூ, நயன்தாரா வாழ்த்து வைரல்
இதற்கிடையில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ வெளியிட்ட பதிவு வைரலானது. அவர், "என் சகோதரர் விஜய்... 'ஜனநாயகன்' ஆக தலைமை ஏற்கப் போகிறார்" என்று குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.
அதேபோல், நடிகை நயன்தாரா வெளியிட்ட பதிவில்"Congratulations to Vijay sir 💐 you made history today 👍 This is just the beginning of many 😇" என்று கூறியிருந்தார் அதோடு விஜய்யுடன் நடித்த பல நடிகைகளும் நடிகர்களும் தொடர்ந்து விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவுகளால், விஜய்க்கு திரையுலக ஆதரவு அதிகரித்திருப்பது தெளிவாகிறது.
வெங்கட் பிரபு மகான்?
விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம் இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து தான். அவர் இயக்கிய 'GOAT' படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் நம்பர் TN07 CM2026 என்பதுதான் இப்போது வைரலாகியுள்ளது. 2026-ல் முதல்வராக வருவார் என்பதை முன்னரே கணித்தது போல உள்ளது என்று ரசிகர்கள் அவரை "தீர்க்கதரிசி" என பாராட்டி வருகின்றனர்.
மேலும், படப்பிடிப்பு நேரத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெங்கட் பிரபு சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரசிகர்களின் பதிவுகளை ரீட்வீட் செய்து வருகிறார்.

யுவனிடம் மன்னிப்பு
'GOAT' படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வந்த "விசில் போடு" பாடல் ஆரம்பத்தில் ரசிகர்களிடம் எதிர்ப்பு சந்தித்தது. ஆனால் பின்னர் "விசில்" கட்சி சின்னமாக அறிவிக்கப்பட்டதும், அதே ரசிகர்கள் யுவனிடம் மன்னிப்பு கேட்டு, தற்போது அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.ஏ.சி குடும்ப மகிழ்ச்சி
விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோர் விஜயின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். "என் மகனின் முதல் ரசிகை அவன் அம்மா தான்" என்று எஸ்.ஏ.சி கூறியிருப்பதும் வைரலாகியுள்ளது. பல ஆண்டுகளாக விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பியவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
தற்போது கிடைத்துள்ள தகவல்படி, விஜய் சுமார் 108 தொகுதிகளில் வெற்றி இருக்கிறார். இருந்தாலும் முழுமையான பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்கள் தேவைப்படுகின்றன. இதனால் கூட்டணி அரசியல் சாத்தியம் குறித்த பேச்சும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், ரசிகர்கள் "இது தொடக்கம் மட்டுமே... அடுத்து பிரதமர்" என்ற அளவிற்கு எதிர்பார்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். மறுபுறம், எதிர்க்கட்சிகள் வாக்களித்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
பிரேம்ஜி பதிவும் வைரல்
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி அமரன் கூட "என் அண்ணன் அன்றே கணித்துவிட்டார்" என்ற வகையில் பதிவு வெளியிட்டிருப்பது வைரலாகியுள்ளது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications