தரையிறங்கும் போது சூறைக்காற்று.. தள்ளாடிய கத்தார் ஏர்வேஸ் விமானம்! திக் திக்.. பரவும் வீடியோ
தோஹா: கத்தாரில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது பலத்த சூறைக்காற்று வீசியதால் அந்தரத்தில் தள்ளாடியது. பலத்த காற்றால் தள்ளாடியபடி விமானம் தரையிறங்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரங்களை பார்க்ககலாம்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கத்தார் அரசின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு சுவிட்சர்லாந்து சென்றுள்ளது. இதற்காக கத்தார் ஏவேஸ்க்கு சொந்தமான ஏர்பஸ் 320 விமானத்தில் அதிகாரிகள் குழுவினர் பயணம் செய்தனர். இந்த விமானம் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் விமான நிலையத்தில் தரையிறங்க வந்தது.

வானில் தள்ளாடிய விமானம்
விமானம் தரையிறங்கும் நேரத்தில் அங்கு திடீரென பலத்த காற்று வீசியுள்ளது. இதனால், விமானம் அங்கும் இங்குமாக விமானம் தள்ளாடியது. எங்கே ஓடுபாதைக்கு பதிலாக பக்கவாட்டு வெற்றிட பகுதிகளுக்கு சென்றுவிடுமோ என பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில் இந்த காட்சிகள் இருந்தன. எனினும், சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானம் வானில் அந்தரத்தில் தள்ளாடியபடியே கீழே இறங்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சுவிட்சர்லாந்து ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, இந்த நிகழ்வானது கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் போது, மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
தரையிறங்க முடியாது என தெரிந்தால்..
பலத்த காற்று வீசியதால் விமானம் லேண்டிங் ஆவதை கைவிட்டுவிட்டு விடும் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் விமானி பத்திரமாக லேண்டிங் செய்துவிட்டார் என்றும் கூறினர். தாமஸ் ஹர்டர் என்ற விமானி கூறுகையில், "விமானம் தரையிறங்க வந்த நேரத்தில் காற்று பலமாக வீசியது. எனவே, அப்போது இருந்த வானிலை சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, விமானத்தை தரையிறக்க முயற்சிப்பதற்கு பதிலாக மீண்டும் மேலே சென்று சிறிது நேரம் கழித்து தரையிறங்க முயற்சிப்பதே சிறந்த முடிவாக இருந்து இருக்கும்.
விமானம் தரையிறங்கும் நேரத்தில் பலத்த காற்று வீசினால், அங்குள்ள ஆபத்து சூழல்களை விமானிகள் கவனமாக மதிப்பிட்ட பிறகே முடிவு செய்வார்கள். பலத்த காற்று வீசும் நேரத்தில் தரையிறங்க முடியாது என்று தெரிந்தால், வானில் வட்டமிட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து தரையிங்க முயற்சிப்பார்கள்" என்று கூறினார்.
திக் திக பயணம்
விமானம் பத்திரமாக தரையிறங்கிய பிறகு விமானத்தில் பயணித்தவர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கத்தார் அமீர் ஷேக் தமிம் இன் ஹமாத் அல் தானி, சுவிட்சர்லாந்து செல்வதற்கு முன்பாக அவரது அதிகாரிகள் குழுவினர் சுவிட்சர்லந்து சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த விமானமே இப்படி திகிலூட்டும் வகையில், திக் திக் முறையில் தரையிறங்கியுள்ளது.
பெர்ன் நகரில் கத்தார் அமீர் மற்றும் சுவிட்சர்லாந்து அதிபர் காய் பர்மெலின் ஆகியோர் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.



Click it and Unblock the Notifications
