கார்த்திகை மாத பலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் யாருக்கு யோகம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-mesham-rishabam-mithunam-to-enjoy-good-fortune-career-growth-and

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு மாற்றங்கள் நிறைந்த நல்ல மாதமாக இருக்கும். பெரிய அளவில் சோதனைகள் எதுவும் இருக்காது. எதையும் சமாளிக்கக்கூடிய அமைப்பு. அதிர்ஷ்டம் அருகில் இருப்பது போன்ற எண்ணம் ஏற்படும். பெரிய அளவில் மாற்றமும், முன்னேற்றமும் இருக்கும். ராசியும், ராசிநாதனும் வலுவாக இருப்பதால் எல்லா விஷயங்களையும் எளிதாக சமாளிப்பீர்கள்.

குரு, சுக்கிரனின் பார்வை இருப்பதால் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். 7 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் திருமணத்தில் இருந்து வந்த தடை அமைப்புகள் நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் விலகும். பிள்ளைகள் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள். தூர இடத்தில் இருக்கும் பிள்ளைகள் மீண்டும் வருவதற்கு சம்மதிப்பார்கள்.

தூர இடத்திற்கு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கக்கூடிய யோகம் உண்டாகும். படிப்படியாக முன்னேற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் தைரியம், தெம்புடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செய்வோருக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்.

ஜென்மசனி நடைபெறுவதால் இப்போது பேராசைப்பட்டு எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது. வேலையை விட்டு தொழில் தொடங்குவது போன்றவற்றில் சிறு சிறு தடைகள், சங்கடங்கள் ஏற்படும். கூட்டுத் தொழிலை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். கணவரால் ஓரளவுக்கு சந்தோஷம் ஏற்படும். கணவருக்கு சிறு சிறு முன்னேற்றம் ஏற்படும். பெரிய சோதனைகள் இருக்காது.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசியினருக்கு முயற்சிகள் அனைத்தும் பழிக்கக்கூடிய தன்மை ஏற்படும். நிலம், காடு, பண்ணை, தோப்பு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும். தொழில் அற்புதமாக இருக்கும். எல்லாவற்றிலும் தைரியமாக நின்று ஜெயிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலையில் சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கணவனால் லாபம், மனைவியால் லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய காதல் அமையும். காதலில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. இளைஞர்களுக்கு நல்லவை கூடுதலாக நடக்கும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுக்கு வேலை, படிப்புக்காகச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விசா, பாஸ்போர்ட் கிடைக்கும்.

பூர்வீகத்துக்கு திரும்பி வராலம் என்று நினைப்பவர்களுக்கு சிறு சங்கடங்களைக் கொடுக்கும். வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவர்களுக்கு அங்கேயே இருக்கும் அமைப்பைக் கொடுக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் பாதிப்புகளைக் கொடுக்கும். தந்தை நம் பேச்சை கேட்காமல் இருப்பது, ஏதாவது மன வருத்தம் ஏற்படுவது, ஆரோக்கிய குறைபாடு, பொருளாதாதப் பிரச்சனைகள் என ஏதாவதொரு வகையில் சிறு சிறு பாதிப்புகள் வரும்.

எதிர்பாராத தன வரவு, பண வரவுகள் உண்டு. வீட்டுக் கடன் அடைவதற்கான யோகம் உண்டாகும். சிலருக்கு ஹவுசிங் லோன் கிடைக்கும். வண்டியை மாற்றுவது போன்ற யோகம் உண்டு. சிலருக்கு நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். நட்புகளால் நல்ல நன்மைகள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரக்கூடிய மாதமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலம், உங்கள் இனம், மதம், மொழி இல்லாத இடங்களுக்குப் போகக்கூடிய அமைப்பு, இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்லும் அமைப்பு உண்டாகும். ஓரளவிற்கு நல்லவை கூடுதலாக வரக்கூடிய மாதமாக இருக்கும். சகோதரர்களின் மூலமான யோக பலன்களை அதிகரிக்கும்.

சமுதாயத்தில் உயர்ந்த மனிதரின் அறிமுகம், அவர்கள் உங்கள் சாதகமாக நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பணவரவுகள் அற்புதமாக இருக்கும். கணவன், மனைவி, உறவுகள் விஷயத்தில் இருந்து வந்த கசப்புகள் நீங்கும். துன்பம், துயரம், துக்கம் எதுவும் இல்லாத நிம்மதியான நிலைமைகள் இருக்கும். இந்த மாதம் தொட்டது துலங்கக்கூடிய மாதமாக இருக்கும். தொழில் அற்புதமாக இருக்கும்.

லாபங்கள் கிடைக்கும். 11 ஆம் இடத்தை குருவும், சுக்கிரனும் சேர்ந்து பார்ப்பதால் அண்ணன், அக்காள் உறவு நன்றாக இருக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டியாளர்கள் விலகுவார்கள். சட்டப் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும். வழக்குகள், பஞ்சாயத்துகள், பிரச்சனைகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில் சுமூகமாக முடியும். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய கடன்கள் வந்து சேரும். ஏதாவதொரு வகையில் தொழில், வீடு கட்டுவது, சொத்துக்கள் போன்றவற்றிற்கு கடன் வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+