இந்து பெண் – கிறிஸ்தவ ஆண் திருமணம் ‘செல்லாது’.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பின்னணி
சென்னை: இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்தனர். இதில் அந்த ஆண் தன்னை ஏமாற்றி திருமணம் நடந்ததாக கூறி விவாகரத்து கோரினார். ஆனால் சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த ஆண் மேல்முறையீடு செய்த நிலையில் இந்து திருமண சட்டத்தில் பதிவு செய்ததால் இந்து பெண் - கிறிஸ்தவ ஆண் ஆகியோரின் திருமணமே செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அந்த மனுவில் தன்னை ஏமாற்றி இந்து மதத்தை சேர்ந்த தனது பெண் திருமணம் செய்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''என்னிடம் புராஜெக்ட் பணிக்காக பெண் ஒருவர் உதவி கேட்டார். நான் அவருக்கு உதவி செய்தேன். அதன்பிறகு அந்த பெண் என்னிடம் காதலை வெளிப்படுத்தியது. நான் மறுத்துவிட்டேன். பெங்களூருக்கும் சென்றேன். ஆனால் அந்த பெண் எனக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியது. கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி அந்த பெண் என்னை தொடர்பு கொண்டு சென்னை வரும்படி கூறினார். தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது. சாட்சியாக கையெழுத்திட வரும்படி கூறினார். நான் சாட்சியாக சென்று கையெழுத்திட்டேன். ஆனால் அப்போது தான் தெரிந்தது. நான் போட்டது சாட்சி கையெழுத்து இல்லை. அந்த பெண்ணை திருமணம் செய்ததற்கான கையெழுத்து. இதனால் அதிர்ச்சியடைந்தேன். அவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்தார்.
இந்து திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்தார். இந்த திருமணத்தை ரத்து செய்து, விவாகரத்து வழங்க வேண்டும்'' என குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய குடும்ப நல நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது அந்த பெண் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவருக்கு தெரிந்தே திருமணம் நடந்தது என்று கூறினார்.
இதையடுத்து குடும்ப நல நீதிமன்றம் அந்த ஆணின் மனுவை தள்ளுபடி செய்தது. 2019ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதியில் விவாகரத்து வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்த ஆண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் மற்றும் எஸ் ரவிகுமார் அடங்கிய அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அப்போது நீதிபதிகள், ''இந்து திருமண சட்டத்தின் 5 மற்றும் 8-வது பிரிவுகளின்படி பார்த்தால் இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கும், வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவருக்கும் இடையிலான திருமணத்தை இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வது மட்டுமே செல்லுபடியாகாது என்பது தெளிவாகிறது.
ஒரு இந்துவிற்கும், கிறிஸ்தவருக்கும் இடையேயான திருமணம், 'இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம்' அல்லது 'சிறப்பு திருமணச் சட்டம்' ஆகியவற்றின் கீழ் மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த வழக்கில், சிறப்பு திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி திருமணம் நடத்தப்படவோ அல்லது பதிவு செய்யப்படவோ இல்லை.
மாறாக, முக்கியமான உண்மைகளை மறைத்து இந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது; இது சட்டப்படி செல்லாது. இத்தகைய பதிவு, அந்தத் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு திருமணம் செல்லாதது என்று அறிவிப்பதற்கு 16 ஆண்டுகள் ஆகியுள்ளது. எதிர்க்காலத்தில் இந்த சட்டசிக்கல்களை தவிர்க்க இந்த உத்தரவின் நகலை பதிவுத்துறை தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதனை அவர் அதனை அனைத்து திருமண பதிவு அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



Click it and Unblock the Notifications
