கடகம், சிம்மம், கன்னிக்கு ஜாக்பாட்.. கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது
கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கடகம் ராசி பலன்
கடகம் ராசியினருக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய மாதமாக இந்த கார்த்திகை மாதம் அமையும். பண வரவு அற்புதமாக இருக்கும். பங்குச் சந்தை, யூக வணிகத்தில் நல்ல வருமானம் வரக்கூடும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில், கூட்டுத் தொழிலில் இருந்து பிரிந்து போய்விடலாம் என்று நினைத்தவர்களுக்கு மனமாற்றம் ஏற்படும். பிரிந்து வாழ்வதை விட, சேர்ந்து வாழ்வது நல்லது என்கிற எண்ணம் ஏற்படும். 4 ஆம் இடத்தில் சுக்கிரன் வலுத்திருக்கிறார். தாயின் ஆதரவு, அனுசரணை கிடைக்கும். அம்மாவிடம் இருந்து சம்மதம் கிடைப்பதற்காக காத்திருப்பவர்களுக்கு சம்மதம் கிடைக்கும்.
இளைய பருவத்தினருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம், நிலம், கட்டில், மெத்தை, பீரோ போன்றவை வாங்குவதற்கான அமைப்பு ஏற்படும். வேற்று மத, மொழி, இனத்தைச் சேர்ந்தவர்களால் நல்லவைகள் நடக்கும். ஆண், பெண் உறவுகள் நன்றாக இருக்கும்.
வேற்று மத, மொழி, இனத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்வதற்கான யோகம் உண்டு.
இளைஞர்களுக்கு இதுவரை இருந்து வந்த மன அழுத்தம் விலகும். டார்கெட் போன்ற அமைப்பில் இருந்தவர்களுக்கு நல்லவை நடக்கும் யோகம். பணவரவு, பணம் சம்பாதித்துத் தரக்கூடிய மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல மாதமாக அமையும்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசியினருக்கு பெரிய நிம்மதி இந்த மாதம் முதல் ஏற்படும். எதிரிகளை ஜெயிக்கும் யோகம் ஏற்படும். எல்லா விஷயங்களும் நிறைவாக இருக்கக்கூடிய காலகட்டம். எதிர்ப்புகளை வெல்லும் அமைப்பு. உங்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த எதிரிகள் இனி ராகு கேதுவால் தொல்லைகளை அனுபவிப்பார்கள். கார்த்திகை மாதம் முதல் உங்கள் நிலைமை நன்றாக இருக்கும். ஆனால், எதிரிகள் பாதிக்கப்படுவார்கள்.
அஷ்டமத்து சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பூர நட்சத்திரக்காரர்கள் எல்லாருக்கும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெரிய அடித்தளம் ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அஷ்டமத்து சனி விலகுகிறது. 30 ஆண்டுகளுக்கு உங்களுக்கு அஷ்டமசனி வராது. ஜூன் மாதத்தில் இருந்து சிம்ம ராசியினர் வீறு கொண்டு எழக்கூடிய சூழல் ஏற்படும்.
சிம்மம், மீனம் இருக்கும் வீட்டில் பொருளாதார பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை என ஏதாவது ஒன்றை சந்தித்துக் கொண்டிருந்தீர்ப்பீர்கள். இந்த நிலைமைகள் அனைத்தும் கார்த்திகை மாதம் முதல் விலகும். 90 சதவீதம் பேருக்கு தொல்லைகள், துக்கங்கள் குறையும். தைரியம் அதிகரிக்கும். தந்தை வழி அமைப்பில் கைகொடுக்காத நிலைமைகள் அனைத்தும் மாறும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு நல்லவை கூடுதலாக நடக்கும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ஏதோ ஒரு வகையில் கடவுளின் பார்வை உங்கள் பக்கம் இருக்கும். விபரீத ராஜயோகம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புகழ் கிடைக்கும். கலைத் திறமையை வைத்துக் கொண்டு வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் வாய்ப்புகள் தேடி வரும்.
மீடியா துறையில் சாதிக்க வேண்டும், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஏற்படும். பயணங்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். வெளிமாநிலம், வெளிநாடு போன்ற தொலைதூரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து உங்களை நம்பி அனுப்பக்கூடிய வேலைகளை சீக்கிரமே முடித்துக் கொடுப்பீர்கள். பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது.
வரும் சில மாதங்களில் பண வரவு நன்றாக இருக்கும். அதனை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. செலவுகள் செய்யாமல் இருப்பது. மற்றவர்களை நம்பி தொழில் ஆரம்பிப்பதை தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். முதலீடு செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. 2028, 2029 அற்புதமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
