யாரு படம் ஓடினாலும்.. WTCல் 25 அரைசதங்களை விளாசிய முதல் இந்தியர்.. ரிஷப் பண்ட் சம்பவம் தரமா இருக்கா!

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: உலக டெஸ்ட் சாம்பியம்ஷிப் வரலாற்றில் 25 அரைசதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 55 பந்துகளில் அரைசதம் கடந்த ரிஷப் பண்ட், SENA நாடுகளில் 50 சிக்சர்களை விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் நிக்கல்ஸ் 175 ரன்களையும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்களையும் விளாசி தள்ளினர்.

Rishabh Pant

இதன்பின் இந்திய அணி களமிறங்கி 2வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பினர். கேஎல் ராகுல் சதம் விளாசி 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் கேப்டன் சுப்மன் கில் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இளம் வீரர் படிக்கல் 80 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதேபோல் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் ஆட்டம் வழக்கம் போல் யாராலும் கணிக்க முடியாத வகையில் அமைந்தது. அவர் முதல் 37 பந்துகளுஇல் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்த 18 பந்துகளில் 37 ரன்களை விளாசி தள்ளினார். ஜேக்கப் டஃபி ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியை சிதறவிட்டார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 22வது அரைசதம் இதுவாகும். இதுவரை ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 சதங்களை விளாசி இருக்கிறார். அதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 6 சதங்கள், 19 அரைசதங்களை விளாசி உள்ளார். இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 25 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் SENA நாடுகளில் 50 சிக்சர்களை விளாசிய முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதுவரை இங்கிலாந்து மண்ணில் 28 சிக்ஸ், ஆஸ்திரேலியாவில் 15 சிக்ஸ், தென்னாப்பிரிக்காவில் 4 சிக்ஸ், நியூசிலாந்து மண்ணில் 3 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இதனால் ரிஷப் பண்ட் ஆட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+