Gold price: 5 ரூபாய் ஏறினால் 10 ரூபாய் இறங்கும்.. தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்? நிபுணர்கள் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இனி எங்கே குறைய போகிறது.. சாமானிய மக்கள் எல்லாம் கனவில் தான் வாங்க முடியும் போல நினைத்துக்கொண்டு இருந்த நிலையில், தங்கம் விலை தாறுமாறாக சரிந்து நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாள்தோறும் சரிந்து வருவதால் விலை குறைந்தாலும் கூட இன்னும் குறையுமா? என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் நகைப்பிரியர்கள்.

ஆனால் குறைந்த வேகத்தில் சட்டென எகிறி மீண்டும் உச்சாணிக்கு போய்விடுமோ என்ற அச்சமும் ஒருபக்கம் நிலவுகிறது. தங்கம் விலை இப்படி தலைகீழாக சரிந்து வருவதற்கு என்ன காரணம். விலை தொடர்ந்து சரியுமா? அல்லது ஏற்றம் காணுமா? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

Gold Price reason for the decline Will the rate continue to fall Economic experts explain

தங்கம் விலை உயர காரணம் என்ன?

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்து இருந்த முதலீடுகளை விற்று லாபம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த 19 ஆம் தேதி நிலவரப்படி எம்.சி.எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.44 குறைந்து ரூ.1,29,770-ஆக வர்த்தகமானது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,739.85 டாலராக இருந்தது. இந்த சரிவுக்கு பல்வேறு காரணங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. அதாவது, தங்கத்தின் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சம் தொட்ட போது, முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த தங்கத்தை விற்பனை செய்து லாபம் ஈட்ட தொடங்கினர்.

டாலர் மதிப்பு அதிகரிக்கும்போது

முதலீட்டாளர்கள் பெருமளவில் விற்க தொடங்கியதால், சந்தையில் அதன் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியது. தங்கம் விலை சரிய இது ஒரு காரணம் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இரண்டாவதாக, அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு அதனை தொடர்ந்து வட்டி விகிதங்களை மத்திய வங்கிகள் உயர்த்தியது உள்ளிட்டவை மற்றொரு காரணமாகும்.

அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 1.5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் டாலர் அடிப்படையில் வர்த்தகமாகி வந்த தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் முதலீட்டாளர்கள் மத்தியில் குறையத்தொடங்கியது.

தங்கம் விலை இன்னும் குறையும்

அமெரிக்க மைய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனால், தங்கத்தை விட வட்டி வருமானம் அதிகம் கிடைக்ககூடிய அமெரிக்க அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில், ஆர்வம் பலருக்கும் அதிகரித்துள்ளது. பத்திரங்களின் வட்டி விகிதம் 5.10 என்ற அளவில் உள்ளது. பத்திரங்களின் வட்டி வகிதம் அதிகம் ஆகும் போது தங்கம் விலை இன்னுமே குறைய வாய்ப்புள்ளது.

டாலர் குறியீடு வலுவடையும் போது, அங்கே தங்கத்தின் டிமாண்ட் குறையும். அவர்கள் வாங்குவதை குறைப்பார்கள். இதன் காரணமாக தங்கம் விலை மேலும் குறையும். வட்டி விகிதத்தை அமெரிக்கா இன்னும் அதிகப்படுத்தினால் தங்கம் விலை இன்னமும் குறைய வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஒரு கிராம் 11 ஆயிரம் குறையும்

மேலும், மணிஷ் சர்மா என்ற சந்தை ஆய்வாளர் கூறுகையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,670 முதல் 3,640 டாலர் வரையிலான நிலைக்கு சரிய வாய்ப்புள்ளது என்றார். ஒரு அவுன்ஸ் என்பது தோராயமாக 31.1 கிராம் தங்கம் ஆகும். ஜதீன் திரிவேதி என்ற சந்தை நிபுணர் கூறுகையில், "சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 3,350 முதல் 3,500 டாலர் வரை எட்டும். இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் ரூ.1.10 லட்சம் என்ற நிலையில் இருக்கலாம்" என்றார். ஒரு கிராம் ரூ.11,000 வரை குறையலாம். குறுகிய காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்றங்கள் இறக்கங்கள் தொடர வாய்ப்பு உள்ளது" என்றனர்.

5 ரூபாய் ஏறினால் 10 ரூபாய் இறங்கும்

பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறுகையில், "தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் ஏறினாலும் இறங்கினாலும் அவர்கள் தேவைக்கு ஏற்றபடி நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதுதான் நல்லது. தொகையை முடிவு செய்துவிட்டால் விலை எறும்போது குறைவான அளவு தங்கம் வாங்குவீர்கள். குறையும் போது அதிகம் வாங்க முடியும். ஒரு சில ஆண்டுகளுக்கு கூட தங்கம் விலை தற்போது உள்ள சூழல் தொடர வாய்ப்பு உள்ளது.

தங்கத்தின் விலையை பொறுத்தவரை இனி ஏறுமா? என்றால் கொஞ்சம் ஏறும். 5 ரூபாய் ஏறினால் 10 ரூபாய் இறங்கும் அடுத்த சில மாதங்களுக்கோ, ஆண்டுகளுக்கோ இருக்கும் என நினைக்கிறேன். ஏறாமல் இருக்காது. இறங்காமலும் இருக்காது. ஏறுவது குறைவாகவும் இறங்குவது அதிகமாகவும் இருக்கும். ஏற்கனவே முதலீடு செய்ய தவறவிட்டவர்களுக்கு முதலீடு செய்ய இது ஒரு வாய்ப்பாக இருக்கும். சில மாதங்களோ, ஆண்டுகளோ கூட முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+