விஜய் ஆண்டனி செய்த ஒரே ஒரு சம்பவம்.. இப்போ சோசியல் மீடியாவே கொண்டாடுது.. இப்படியும் ஒரு நடிகரா?
சென்னை: விஜய் ஆண்டனி நடித்த அப்பா குட்டி படம் நேற்று தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆனால் இன்று அவர் செய்த ஒரு சம்பவம் தான் சோசியல் மீடியாவில் அவரைப் பற்றி பேச வைத்திருக்கிறது. விஜய் ஆண்டனி எளிமையாகவே இருக்க விரும்புவார். அது பற்றி அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். தான் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல விஷயங்கள் இருந்தாலும் நானும் ஒரு மனுஷன் தான். நான் ஒன்றும் வேற உலகத்தில் இருந்து வந்துவிடவில்லை என்று ஜாலியாக சொல்லுவார். ஆனால் இப்போ அதைத்தான் அவர் நிரூபித்திருக்கிறார்.
ட்ரெயினில் போன விஜய் ஆண்டனி
அப்பா குட்டி படம் நேற்று தியேட்டரில் வெளியானதை தொடர்ந்து, இன்று கோயம்புத்தூர் திரையரங்குக்கு விசிட் செய்வதற்காக விஜய் ஆண்டனி மற்றும் பட குழுவினர்கள் முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால் திடீரென உடன் டிக்கெட் எடுத்து பயணிக்கும் ட்ரெயினில் கோயம்புத்தூருக்கு சென்னையில் இருந்து விஜய் ஆண்டனி கிளம்பி இருக்கிறார். இவரை திடீரென டிரெயினில் பார்த்ததும் அங்கிருந்த பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

வைரலாகும் வீடியோ
ஆனால் அவரோ நானும் உங்களைப் போல, என்னுடைய சொந்த வேலைக்காக ட்ரெயினில் போகிறேன் அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு கூலாக ஒரு சீட்டில் உட்கார்ந்து தனது வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். இதை வீடியோ எடுத்த சிலர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து விஜய் ஆண்டனியின் எளிமையை பாருங்களேன் என்பது போல கேப்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வீடியோ காலையிலிருந்து இணையத்தையே கலக்கி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே விஜய் ஆண்டனி பேசும் வீடியோக்கள் கூட பலருக்கும் ஃபேவரைட் ஆக இருக்கிறது. அதேபோல இப்போ இவருடைய இந்த செயலும் பாராட்டப்பட்டு வருகிறது. தான் பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் நடந்து கொள்வதை சிலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் இவருடைய அப்பா குட்டி படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
மனைவி சொன்ன விஷயம்
படத்தில் எடிட்டிங்கில் சில குழப்பங்கள் ரசிகர்களை சுத்த வைத்திருப்பதாக கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ படம் சூப்பராக தான் இருக்கிறது என்று சொல்லுகின்றனர். ஏற்கனவே ஒரே நாளில் நேற்று ஓம், சத்தியவான் சாவித்திரி மற்றும் அப்பா குட்டி என 3 படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஓம் படத்தை தொடர்ந்து அப்பா குட்டி வசூல் பெற்று இருக்கிறது. ஆனால் இந்திய அளவில் ஒரு கோடி வசூல் பெறவில்லை.
ஏற்கனவே இந்த படத்தில் லாபம் கிடைத்தால் தான் வீட்டில் விஜய் ஆண்டனி இதற்கு முன்பு உடைத்த பொருட்களை எல்லாம் வாங்க முடியும் என்று அவருடைய மனைவி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அதனால் படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் ஆண்டனி இப்படி ட்ரெயினில் பயணிக்கிறாரா என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.



Click it and Unblock the Notifications
