சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு சம்பவம்! இன்னொரு ரவுண்டு தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!
சென்னை: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பருவமழை நாளை முதல் இன்னொரு ரவுண்டு தொடங்குகிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களுக்கு நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நாளை மறுநாள் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.23 தொடங்கி 26 வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதல் பெரிய நம்பிக்கையை கொடுத்திருந்தது. இருப்பினும் இந்த காலத்தில் உருவான அக்வான் புயல் ஆந்திரா நோக்கி சென்றதால்.. நமக்கு பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை.
ஏற்கெனவே மேட்டூர் அணையில் போதுமான அளவில் நீர் இல்லை. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இப்போது பருவமழையும் பெரிய அளவுக்கு கை கொடுக்காததால்.. டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
