என்னதான் நடக்குது கடலூரில்! கோழிகள் மட்டுமல்ல.. காகங்களும் காலி! மொத்தமாக ரவுண்டப் செய்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இதுவரை பறவை காய்ச்சல் காரணமாக சுமார் 80,000க்கும் அதிகமான கோழிகளும், காங்கள் சிலவும் உயிரிழந்துள்ளன.

கோழிகளும், காகங்களும் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

Cuddalore Bird Flu Outbreak

குறிப்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, தேசிய நோய் கட்டுப்பாட்டு இணை இயக்குனர் நிதி சைனி, தொற்றுநோய் நிபுணர் வினிதா குப்தா மற்றும் ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த நுரையீரல் மருத்துவர் ஆகிய 3 மருத்துவர்கள் கொண்ட மத்திய குழு கடலூருக்கு வந்து ஆய்வை தொடங்கி இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 125 இடங்களில் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் 16 பண்ணைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட 16 பண்ணைகளில்.. 10 பண்ணைகளில் இருந்த கோழிகள் உயிரிழந்துள்ளன. மற்ற பண்ணைகளில் உயிரிழப்பு ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ஆய்வுக்குச் சென்ற மத்திய குழுவினர், கட்டியாங்குப்பம் பகுதியில் உள்ள 2 கோழி பண்ணைகளிலும், குள்ளஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். கோழிப்பண்ணைக்கு சென்ற மத்திய குழுவினர்.. பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கேட்டறிந்தனர். அதேபோல, தொற்று பாதிப்பு கண்டறிய கொரோனா காலத்தில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டதை போல.. இப்போது சேகரித்து சென்றார்களா? என்றும் விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து, உயிரிழந்த கோழிகள் புதைக்கப்பட்ட இடத்தையும் நேரில் பார்வையிட்டு.. வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்தனர்.

அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம், எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது? என்பது குறித்து விசாரித்து இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் கூட.. அதை ஒட்டிய டெல்டா மாவட்டங்களில் கறிக்கோழி விலை பெரிய அளவுக்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+