இனி பாலைவனம் வேண்டாம்.. கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஓட்டகங்கள்.. பின்னணி
பெய்ஜிங்: இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. மணல் குன்றுகளுக்கு மத்தியில் ராணுவ அணிவகுப்பு நடப்பது போல் ஏராளமான ஓட்டகங்கள் நடந்து செல்கின்றன. இந்த ஓட்டகங்கள் பாலைவனத்தின் மையப்பகுதியில் இருந்து வேகவேகமாக வெளியேறி வருகின்றன.

இணையதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோக்களில் இது டிரெண்ட்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் இந்த ஓட்டகங்கள் ஏன் பாலைவனத்தை விட்டு வெளியேறுகின்றன? ஏதேனும் இயற்கை பேரிடர் வருகிறதா? என கேள்வி எழுப்பி வரும் நிலையில் தான் அதன் பின்னணி பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
இந்த வீடியோ 'படெயின் ஜாரன்' பாலைவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாலைவனம்சீனாவில் தன்னாட்சி பெற்ற பகுதியான 'இன்னர் மங்கோலியா'வில் .ள்ளது. இது சீனாவின் 3வது மிகப்பெரிய பாலைவனமாகும். இந்த பாலைவனத்தை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் அதிகளவில் ஓட்டகங்கள் வளர்த்து வருகின்றனர்.
ஓட்டகங்களை வீட்டில் வளர்த்து பராமரிப்பது மிகவும் சிரமமாகும். அதிகப்படியான செலவு, தண்ணீர் தேவைப்படும். ஆனால் பாலைவனத்தில் கொண்டு போய் விட்டால் அந்த செலவு குறையும்.
இதனால் அந்த பகுதி மக்கள் ஓட்டகங்களை ஒன்றாக திரட்டி பாலைவனத்தில் கொண்டு போய் விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 6 மாதங்கள் வரை பாலைவனத்திலேயே ஓட்டகங்கள் உலா வரும். இந்த மாதங்களில் பாலை வனத்தில் தாவரங்கள் செழித்து வளரும். இதனால் தங்களுக்கு தேவையான உணவை தானே தேடி தின்று ஓட்டகங்கள் வளரும்.
இந்நிலையில் தான் தற்போது பாலைவனத்தில் உள்ள ஓட்டகங்களை கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறது. உண்மை என்னவென்றால் ஓட்டகங்கள் வெளியேறவில்லை. ஓட்டகங்கள் வெளியேற்றப்படுகின்றன. ஓட்டக உரிமையாளர்கள், ஓட்டகம் மேய்ப்பவர்கள் என ஏராளமானவர்கள் ஓட்டகங்களை பாலைவனத்தில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.
இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத தொடக்கத்தில் சீனாவில் குளிர்காலம் தொடங்கும். இந்த சமயத்தில் பாலைவன பகுதிகளில் கடும் குளிர் இருக்கும். பாலைவனத்தில் உள்ள புற்கள் பனியால் மூடப்பட்டு விடும். ஓட்டகத்துக்கு தேவையான உணவு கிடைக்காமல் போய்விடும். அதோடு கடும் குளிரில் ஓட்டகங்கள் பாதிக்கப்படும். இதனால் தான் தற்போது ஓட்டகங்கள் கூட்டம் கூட்டமாக பாலைவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த பாலைவனம் அளவில் மிகப்பெரியது. இதனால் ஓட்டகங்களின் நடமாட்டத்தை ட்ரோன் மற்றும் செயற்கைகோள் போட்டோக்களை வைத்து அறிந்து அதனை மீட்டு வருகின்றனர். இருப்பினும் முழுமையாக தங்களின் ஓட்டகங்களை அடையாளம் கண்டு வீட்டிற்கு அழைத்து வருவதற்கு ஒரு மாதம் வரை ஆவதாக சொல்லப்படுகிறது.
ஓட்டகங்கள் கூட்டம் கூட்டமாக உலா வரும். இதனால் ஓட்டக கூட்டத்தை கண்டுபிடித்தால் தங்களின் ஓட்டகத்தை அடையாளம் காண்பது பெரிய சிரமமாகும். இந்த சிரமத்தை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களின் ஓட்டகங்களை தனித்து அறிய அதன் உடலில் முத்திரையிட்டு வைத்து இருப்பார்கள். அதனடிப்படையில் அந்த ஓட்டகங்களை அவர்கள் அடையாளம் கண்டு வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.
தற்போது குளிர்காலம் தொடங்குவதால் பாலைவனத்தில் இருந்து ஓட்டகங்கள் வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறது. இந்தசமயத்தில் ஓட்டகங்கள் கூட்டம் கூட்டமாக பாலைவனத்தில் இருந்து வெளியேறும் வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
இதுபற்றி ஃபெங் தாவோ என்பவர் கூறுகையில், ''எங்களுடைய ஓட்டகங்களை அடையாள்ம காண அவற்றின் தலை மற்றும் திமில் பகுதிகளில் அடையாளம் வைத்துள்ளோம். பாலைவனத்தில் 11 நாட்கள் நாங்கள் 9 பேர் சேர்ந்து எங்களுக்கு சொந்தமான 500க்கும் அதிகமான ஓட்டகங்களை கண்டுபிடித்துள்ளோம். என்னிடம் 150 ஓட்டகங்கள் உள்ளன. இதற்கு தீவனம் அளிக்க வேண்டும் என்றால் அதிக செலவு ஏற்படும்.
ஒரு ஓட்டகத்துக்கு ஒரு நாளைக்கு 20 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.275) வரை செலவழிக்க வேண்டும். மாதத்துக்கு ஒரு ஓட்டகத்துக்கு 600 யுவான்(ரூ.8,400) வரை செலவாகிறது.நான் வளர்க்கும் 150 ஓட்டகங்களுக்கு மாதத்துக்கு 90,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12.62 லட்சம்) செலவாகும். இதனால் என்னால் செலவழிக்க முடியாது. இதனால் ஓட்டகத்தை 6 மாதம் பாலைவனத்தில் விட்டுவிடுவோம். அது பாலைவன தாவரங்களை சாப்பிட்டு வளரும்.
நவம்பரில் குளிர்காலம் தொடங்கும். புற்கள் அதிகப்படியான குளிரால் வாடி கருகும். இதனால் ஓட்டகங்களுக்கு உணவு கிடைக்காது. எனவே ஓட்டகங்களை நாங்கள் பாலைவனத்தில் இருந்து குளிர்கால மேய்ச்சல் நிலம் அல்லது ஓட்டகங்களுக்கான அடைப்பிடங்களுக்கு கொண்டு வருவோம். குளிர்காலம் முடிந்த பிறகு மீண்டும் அங்கு புற்கள் வரும். நாங்கள் மே மாதத்தில் ஓட்டகங்களை அங்கு கொண்டு விடுவோம்'' என்றார்.


Click it and Unblock the Notifications
