அம்பாசமுத்திரத்தில் திமுக சார்பாக யாருக்கு சீட்? ரேஸில் பிரபாகரன், ரவீந்திரநாத், மாரிவண்ண முத்து!
நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக சார்பாக களமிறங்கும் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரம் அடைந்துள்ளது. திமுக சார்பாக ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத், திமுக ஒன்றியச் செயலாளர் மாரிவண்ண முத்து ஆகியோர் ரேஸில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களில் யாரின் பெயரை ஸ்டாலின் டிக் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த இசக்கி சுப்பையா பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. தவெக சார்பாக இசக்கி சுப்பையா தான் வேட்பாளர் என்று விஜய் அறிவிக்கவில்லை என்றாலும், அந்த தொகுதியின் சுவர்களில் விசில் சின்னத்துடன் இசக்கி சுப்பையா தான் வேட்பாளர் என்று பிரச்சாரம் நடந்து வருகிறது.

கிராமங்கள் தோறும் பயணம் மேற்கொண்டு இசக்கி சுப்பையா ஆதரவு கோரி வருகிறார். அதேபோல் அதிமுகவில் இருந்தும் நிர்வாகிகளை தவெக பக்கம் இழுக்க தொடங்கி இருக்கிறார். அதேபோல் தேவாலங்களிலும் இசக்கி சுப்பையாவுக்காக வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர். நாதக சார்பாக சீமான் களமிறங்குவதால், அக்கட்சியினரும் சோசியல் மீடியாவில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
டிசம்பர் மாதத்தில் அம்பாசமுத்திரத்திலேயே ஒரு குழு முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளது. ராக்கெட் ராஜா தரப்பின் ஆதரவையும் சீமான் நாடி இருக்கிறார். மனைவி கயல்விழியையும் பிரச்சாரத்தில் இறக்கி முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்ற ஆயத்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் திமுக தலைமையும் அம்பையில் வேட்பாளராக போட தயாராகிவிட்டது.
ஏற்கனவே இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் நல்ல வேட்பாளர்களை பரிந்துரை செய்யுங்கள் என்று கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தனது மகன் பிரபாகரனுக்கு சீட் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஆனால் ஆவுடையப்பன் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு பலமுறை தோல்வி அடைந்தவர்.
இதனால் ஆவுடையப்பன் குடும்பத்தினருக்கு கொடுத்தால், சட்டசபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாது என்று கட்சியினர் தலைமையிடம் கூற தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக ஒன்றியச் செயலாளர் மாரிவண்ண முத்துவின் பெயரை நிர்வாகிகள் சில பரிந்துரை செய்துள்ளனர். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சீட் பெற முயற்சி நடக்கிறது. இதனால் ஸ்டாலின் யாரின் பெயரை டிக் செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
