பூமிக்கு குட்டி நிலவு! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய அதிசயம்! சென்னையிலிருந்து பார்க்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூமிக்கு ஏற்கெனவே நிலவு இருக்கும் நிலையில், தற்போது புதியதாக இன்னொரு நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிலவை வெறும் கண்களால் பார்க்க முடியுமா? தமிழகத்திலிருந்து பார்த்தால் தெரியுமா? என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த வானியலாளர்கள் இந்த குட்டி நிலவை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நிலவுக்கு 2026QQ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

Earth s New Mini Moon

ஹங்கேரியிலுள்ள கொன்கொலி ஆய்வகத்தை சேர்ந்த வானியலாளர் கிறிஸ்டியன் சார்னெஸ்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி டெலஸ்கோப் வைத்து பொழுதுபோகமல் வானத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்திருந்தார். அப்போது வாம்மா மின்னல் என்பதைபோல.. சர்ரென ஏதோ வேகமாக கடந்து செல்வதை பார்த்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இது மனிதர்களால் அனுப்பப்பட்ட விண்கலத்தின் குப்பையாக இருக்கும் என்று தான் நினைத்திருந்தார். ஆனால், பின்னர் ஹவாய் பல்கலைக்கழகத்தின் 2.2 மீட்டர் தொலைநோக்கி மற்றும் லோவல் டிஸ்கவரி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில்.. இது இயற்கையான விண்கல் என்பதை சர்வதேச வானியல் ஒன்றியத்தின் குறுங்கோள் மையம் உறுதி செய்துள்ளது.

இந்த விண்கலின் பாதையானது நமது நிலாவைப் போல வட்டமாக இல்லாமல்.. சூரியன் மற்றும் பூமி ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையாலும் இழுக்கப்படுவதால் ஒழுங்கற்ற பாதையில் பூமியை சுற்றி வருகிறது. பாத எப்படி இருந்தாலும்.. பூமியை சுற்றி வந்தாலே அது நிலா தான் என்கிற அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில், இந்த விண்கலக்கு தற்காலிக நிலா அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு மீண்டும் சூரியனை சுற்ற தொடங்கும் என்பதால்தான் இதற்கு தற்காலிக நிலா அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விண்கல் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியின் சுற்று பாதையை கடந்து செல்கிறது. ஆனால், அதன் வேகம் மற்றும் தூரம் சாதகமாக அமையும் போது மட்டுமே.. பூமியின் ஈர்ப்பு விசையில் சிக்கி நமக்கு நிலாவாக மாறிவிடுகிறது.

இந்த விண்கல் 1 முதல் 2 மீட்டர் அகலமே இருக்கும். அதாவது ஒரு சிறிய காரணி சைஸ் தான் கொண்டது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், இது மிகச் சிறியதாக இருப்பதால்.. வெறும் கண்ணால் இதை பார்க்க முடியாது. சென்னை, மும்பை, டெல்லி என எங்கிருந்து பார்த்தாலும் வெறும் கண்களில் இது தெரியாது. இது டிசம்பர் 13ஆம் தேதி அன்று பூமிக்கு மிக நெருக்கமாக வரும். நெருக்கமாக எனில் சுமார் 13.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவு நமக்கு நெருங்கி வரும். இது பூமிக்கும் நிலவுக்கும் இருக்கும் போது தூரத்தை விட.. 3.5 மடங்கு நீண்ட தூரமாகும்.

இப்படி போகிற வருகிற விண்கல்லை எல்லாம் பிடித்து நிலாவாக மாற்றிக் கொள்வது பூமிக்கு ஒன்றும் புதியதல்ல. இதுக்கு முன்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோல 2020 CD3 எனும் விண்கலை பூமி 3 ஆண்டுகளாக பிடித்து வைத்திருந்தது. அதன் பிறகு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை.. இரண்டு மாதங்களுக்கு 2024 PT5 என்கிற மற்றொரு விண்கல் குட்டி நிலாவாக இருந்து போய்விட்டது.

அந்த வகையில் தற்போது வந்திருக்கும் நிலாவும் அடுத்து கொஞ்ச நாட்கள் சுற்றிவிட்டு, போர் அடித்து விட்டது என்று கிளம்பி போய்விடும். இருந்தாலும் நமக்கு இரண்டு நிலாக்கள் கிடைப்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+