லிமிட்டை மீறாதீங்க.. விஜய் காதுக்கு போன வீடியோ.. போனில் வெடித்த முதல்வர்.. கப்சிப் மோடில் காந்திராஜ்
சென்னை: போலீஸ் ஸ்டேஷனுக்குள் நள்ளிரவில் புகுந்து ஆய்வு நடத்தி, பெண் போலீஸின் செல்போன் வரை வாங்கிச் சோதித்த அமைச்சர் காந்திராஜுக்கு இப்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.. இந்த விவகாரம் முதல்வர் விஜய் கவனத்துக்கும் சென்று விட்டதாம். இதையடுத்து நிறைய சலசலப்புகள் களத்தில் வெடித்துள்ளதாம்.. இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் (அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ), அரக்கோணம் மற்றும் தக்கோலம் காவல் நிலையங்களில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்தி, அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, அமைச்சர் காந்திராஜ் தனது தொகுதிக்குட்பட்ட தக்கோலம் மற்றும் அரக்கோணம் காவல் நிலையங்களுக்கு இரவு நேரத்தில் சென்று, பணியிலிருந்த போலீசாரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்..

அமைச்சரின் வைரல் வீடியோ
மேலும், காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டதுடன், பணியிலிருந்த பெண் போலீசாரின் தனிப்பட்ட செல்போனையும் வாங்கிச் சோதனையிட்டுள்ளார்.. "ஏன், யூனிஃபார்ம் அணியவில்லை" என்றெல்லாம் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து விட்டாராம்.. இந்த முழு நிகழ்வையும் வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டிருந்தார் அமைச்சர்.
அமைச்சரின் இந்த செயல்பாடு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியத்துடன், முதல்வர் விஜய்யின் உள்துறை நிர்வாகம் குறித்து அரசியல் கட்சிகள், கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்... பல்வேறு கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தமிழக டிஜிபிக்கும் இது குறித்த நிறைய புகார்கள் சென்றுள்ளன. அரசுக்கு எதிராகவும், உள்துறையின் அமைச்சரான முதல்வர் விஜய்க்கு எதிராகவும் அந்த புகாரில் பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.
தொலைச்சிடுவேன் - விஜய் வார்னிங்
இதனையடுத்து முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியதாக ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அந்த கடிதத்தில், "நிர்வாக விதிகளின்படி, ஒரு அமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் கீழ் வரும் அலுவலகங்களை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். காவல்துறை என்பது முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையின் கீழ் வருவதால், கூட்டுறவுத்துறை அமைச்சருக்குக் காவல் நிலையங்களை ஆய்வு செய்யவோ, பதிவேடுகளைச் சோதனையிடவோ அதிகாரம் இல்லை.
முதல்வரின் அதிகாரத்தில் அமைச்சர் தலையிட்டிருப்பது, சட்டம் ஒழுங்கில் பதிப்பை ஏற்படுத்தும். அமைச்சரின் ஆய்வு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது நிர்வாகத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
இதனையடுத்து, அமைச்சர் காந்திராஜை 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் தொடர்பு கொண்டு, "உங்கள் துறை தொடர்புடைய பிரச்சனைகளை தாண்டி மற்ற விபரங்களில் தலையிட்டு அதிகப்பிரச்சங்கித்தனமாக நடந்து கொண்டால் தொலைச்சுடுவேன் " என்று எச்சரித்தாராம். முதல்வரின் இத்தகைய எசரிக்கையால் அமைச்சர் காந்தி ராஜின் சப்தநாடியும் ஒடுங்கி விட்டதாம்.
முகத்தைகூட பார்க்கல
இந்த சூழலில், "தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையொட்டி 2வது நாளாக நேற்று அஞ்சலி செலுத்தவும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முதல்வர் விஜய் வந்திருந்தார்.. அப்போது காந்திராஜின் முகத்தை பார்ப்பதையே தவிர்த்தாராம்... அருகில் சென்று வணக்கம் சொல்லவும், பேசவும் முயற்சித்த அமைச்சரிடம்
முகம் கொடுத்துக்கூட பேசவில்லையாம் விஜய்" என்கிறார்கள் தவெகவினர்.


Click it and Unblock the Notifications
