நாங்க அப்பவே சொன்னோம்.. இப்போ நிரூபிச்சுட்டாருல.. முதல்வர் விஜய் பற்றி நடிகர் ஸ்ரீமன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் விஜய் அவருடைய உடலை தோளில் சுமந்து சென்ற வீடியோ இன்னும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு முதல்வர் இப்படி நேரடியாக தனது எம்எல்ஏ உடலை தூக்கி சென்றது பலரையும் நெகிழ வைத்தது. அதே நேரம் இந்த காட்சியை வைத்து சிலர் விமர்சனங்களையும், கிண்டலையும் செய்து வந்தனர். இப்படி பலவிதமான கருத்துக்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விஜயின் நீண்ட கால நண்பரும் நடிகரும்மான ஸ்ரீமன் வெளியிட்ட வீடியோ இப்போ கவனம் ஈர்த்து இருக்கிறது.

நடிகர் ஸ்ரீமன் வெளியிட்ட வீடியோ

அந்த வீடியோவில் விஜய்யை அரசியல் தலைவராக பார்க்காமல், இத்தனை ஆண்டுகளாக பழகிய ஒரு நண்பரை பற்றி பேசி பெருமையாகவே அந்த வீடியோவில் அவர் பேசி இருக்கிறார். அதில், "உயிர் கொடுப்பான் நண்பன் என்று சொல்லுவாங்க. அது மாதிரி ஒரு நண்பனான விஜய் என்ன பிரச்சனை என்றாலும் கூட நிற்பார் என்று எனக்கு தெரியும். ஆனால் இன்னைக்கு ஒரு தலைவன்னு இல்லாம, ஒரு சகோதரனாக சுமந்து போனீங்க பாருங்க... இனி யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை.

இதுதான் அவர் என்று இத்தனை வருஷமா நாங்க சொல்லிட்டு இருந்தோம். ஒருவாட்டி நம்பிட்டார்னா, உயிரை கூட கொடுப்பார் என்று அனுபவிச்சதால சொன்னோம். ஆனா இன்னைக்கு எந்த லாபமும் இல்லாம தோள் மீது சுமந்து சென்று இருக்கிறார் என்றால் அதற்கு ஹாட்ஸ் ஆப். இப்படி ஒருத்தரை தேடிக்கிட்டு இருந்தோம்" என்று விஜய்யின் செயலை பாராட்டி இருக்கிறார்.

Sriman Vijay VS Babu TVK

நடிகர் விஜய்க்கு சப்போர்ட்

விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த பிறகு தொடர்ச்சியாக ஸ்ரீமன் விஜய்க்கு சப்போர்ட்டாக வீடியோ வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். அதிலும் கரூர் சம்பவத்தின் போது கூட விஜய்க்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட்டார். விஜய் வெற்றி பெற்றதும் போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இவருக்கு முன்பு முதல்வர் விஜய் நடிகராக இருக்கும் போது அவருடன் சில படங்களிலும் ஸ்ரீமன் நடித்திருக்கிறார்.

Sriman Vijay VS Babu TVK

மாறாத நட்பு

அதுபோல ஸ்ரீமன், ஸ்ரீநாத், சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், விஜய் என இவர்களுடைய நட்பு வட்டாரம் பற்றி சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரியும். இது ஒரு பக்கம் இருந்தாலும், வி எஸ் பாபு மறைந்த செய்தி வெளியானதுமே விஜய் அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதற்கு பிறகு இறுதி ஊர்வலத்தில் பாபுவின் உடலை மற்றவர்களுடன் தோளில் சுமந்து வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தார்.

அதுவும் இறுதி ஊர்வலம் முழுவதும் செருப்பின்றி அவர் நடந்ததை விஜய் ரசிகர்கள் பாராட்டி பெருமையாக பேசி வருகிறார்கள். விஎஸ் பாபுவின் மறைவு ஒரு குடும்பத்துக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு. அந்த இறுதி தருணத்தில் விஜய் செய்த இந்த செயல் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதை பார்த்து அவருடைய நண்பர் ஸ்ரீமன் வெளியிட்ட இந்த வீடியோவும் இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யை இத்தனை ஆண்டுகளாக நண்பராக பார்த்த ஒருவர் இன்றும் அவருடைய கேரக்டர் மாறவில்லை என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இதையும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+