அனிருத்- காவியா வரவேற்பு கொண்டாட்டம் இத்தனை நாளா? ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத்- காவியா கல்யாணம் கிரீஸில் தனிப்பட்ட முறையில் நடந்திருந்தாலும், வரவேற்பை பிரம்மாண்டமான நடத்த ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே அரசியல், விளையாட்டு, பிரபலங்கள் எல்லாரும் கலந்து கொள்ளும் வரவேற்பு இன்று நடைபெற இருக்கும் நிலையில், வரும் புதன்கிழமை சன் குடும்பத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக இன்னொரு வரவேற்பு நடத்த இருக்கிறார்கள்.

அனிருத் காவ்யா கல்யாணம்

அனிருத், காவியா இருவரும் காதலிக்கிறார்கள் என சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்திருந்தாலும் அது பற்றி எந்த இடத்திலும் பேசாமலேயே தவிர்த்து வந்த அனிருத் கடைசியில் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அனிருத் காவியாவுக்கு கல்யாணம் நடக்கப்போகிறது, வரவேற்பு நவம்பர் 21 தான் என்று தகவல் கிடைத்தபோது கூட அது குறித்து ஆமா, இல்லை என்று எதுவுமே சொல்லாமல் அனிருத் அமைதியாக இருந்தார்.

Anirudh Kavya Maran

இன்று ரிஷப்ஷன்

ஆனால் கடந்த நவம்பர் 11ம் தேதி கிரீஸில் திருமணத்தை முடித்துவிட்டு பிறகு தன்னுடைய மனைவி, மற்றும் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை அனிருத் பகிர்ந்து இருந்தார். அதற்கு பிறகு சில நாட்களாகவே தனது திருமண புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் மணமக்களுக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சினிமா துறை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் சென்னை ஏர்போர்ட்டில் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்பாராத பரிசு

இது ஒரு பக்கம் இருக்க, இப்போ வரும் புதன்கிழமை சன் குழுமத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தனியாக ஒரு ரிசப்ஷன் நடத்தப் போகிறார்கள். ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் சிலருக்கு தங்க மோதிரம், வைர மோதிரம், சாக்லேட் பாக்ஸ் என விதவிதமாக கொடுத்திருக்கிறார்கள். தனது திருமணத்தை முன்னிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் தங்கத்தை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் காவியா. இதை சோசியல் மீடியாவில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+