கொளத்தூர் இடைத்தேர்தல்! திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியா? ஆலோசனைக்கு பின் துரைமுருகன் ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் அங்கு திமுக சார்பில் வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவாரா என கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதிலை இங்கு காணலாம்.

தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு மறைவையடுத்து கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமென திமுக நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவித்து வருவதாகவும் ஆனால், இதில் மு.க ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் இப்போதைக்கு அவசரமில்லை தேர்தல் தேதி அறிவித்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kolathur By election Will DMK leader MK Stalin contest Duraimurugan replies

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியா?

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், முக ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மிகவும் சீக்ரெட்டாக நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ ராசா, பொன்முடி, ஏவ வேலு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் போது, தற்போதைய அரசியல் சூழல், தொகுதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாகவும், இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றால் ஏற்படும் தாக்கம், அதே போன்று மீண்டும் தோல்வியடைந்தால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இறுதி முடிவுகளை மு.க ஸ்டாலின் எடுப்பார் எனவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

துரைமுருகன் பதில்

இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், "ஆலோசன கூட்டமா? அப்படி ஒன்னும் நடைபெறவில்லையே.. பொருளாளரே வரவில்லையே பிறகு எப்படி ஆலோசனை கூட்டம் நடத்த முடியும்" என்றார். மேலும், மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா? என எழுப்பிய கேள்விக்கு, நாங்க சும்மா தான் வந்திருந்தோம். டிவி பார்த்துக்கொண்டிருந்தோம்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+