அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. மகரம், கும்பம், மீனத்திற்கு கார்த்திகையில் பிரகாசமான மாற்றம்
கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், மகரம், கும்பம், மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நிச்சயமாக ஏற்படும். தன லாபம், பண வரவு அற்புதமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, நல்ல சம்பளம் போன்றவை கிடைக்கும். அடுத்தடுத்து வரக்கூடிய சில நிகழ்வுகளால் யோகம் ஏற்படும். பெரிய கஷ்டங்கள் எதுவும் ஏற்படாது. எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும்.
பங்குச் சந்தையில் சம்பாதிக்கும் யோகம் ஏற்படும். இழந்ததை மீண்டும் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். தூர தேசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு உயர்கல்வி, படிப்பு, வேலைக்குச் செல்வது, வெளிநாட்டில் சொந்த வீடு வாங்குவது, குடியுரிமை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும்.
கூட்டுத் தொழிலில் நன்மைகள் நடக்கும். தெய்வ திருப்பணிகளைச் செய்வீர்கள். மலைப் பிரதேசங்கள், காபி, டீ தோட்டம், மலைப் பிரதேசங்களில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள், கட்டட வேலை செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரக்கூடிய மாதமாக இந்த கார்த்திகை மாதம் உங்களுக்கு அமையும். ஆண், பெண் உறவுகள் நன்றாக இருக்கும். திருமண யோகம் ஏற்படும். நீதிமன்றம், வழக்கு என்றிருந்தவர்களுக்கு சாதகமான அமைப்பு ஏற்படும். சுமூகமான தீர்வுகள் கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசியினருக்கு அட்டாகாசமான மாதமாக இருக்கும். பிரகாசமாக மாறுவீர்கள். நல்ல பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ல மன வலிமை, உடல் வலிமை கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கெளரவம், அந்தஸ்து உயரும். நீதிமன்றம், வழக்கு என்றிருந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சம்பாதிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு இனி நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்.
கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காதலன், காதலி உறவு, கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக துணை கிடைக்கும் என்கிற தைரியம் ஏற்படும். செழிப்புடன் காணப்படுவீர்கள். பெரிய அளவுக்கு நன்மைகளைப் பெறுவீர்கள். குருவின் பார்வை இருப்பதால் ஏற்றம் ஏற்படும். மனத்திடம் அதிகரிக்கும்.
குரு ராசியைப் பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். வேலை போய்விட்டால் அதை விட நல்ல வேலை, தொழில் கிடைக்கும். புதிய மனிதராகப் பிறக்கும் காலகட்டமாக இருக்கும். எல்லாவற்றையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இனி வாழ்க்கையில் ஒளி பெறக்கூடிய காலகட்டமாக அமையும்.
மீன ராசி பலன்
மீனம் ராசியினருக்கு மிகப்பெரிய நல்ல தொழில் முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். எதையும் சமாளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லாவற்றிலும் நன்மைகள் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த தொல்லைகள் விலகும். இளைய பருவத்தினருக்கு குறிப்பாக உத்திரட்டாதி நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும்.
தொழிலை முன்னேற்றக்கூடிய அமைப்பு ஏற்படும். வீடு கட்டும் அமைப்பு உள்ளது. ஏதாவதொரு கடன்களால் நல்லவை நடக்கும் அமைப்பு. புதிய கடனை வாங்கி சிலர் பழைய கடனை அடைப்பீர்கள். எந்த வீட்டில் ஜென்ம சனியும், அஷ்டம சனியும் சேர்ந்து கணவன், மனைவி குழந்தைகளாக இருக்கிறீர்களோ அங்கு பொருளாதார முன்னேற்றங்கள் பெரிய அளவில் இருந்திருக்காது. இப்போது அந்த இடங்களில் பெரிய மாற்றமும், முன்னேற்றமும் வரக்கூடிய அமைப்பு ஏற்படும்.
வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஜென்மசனி அமைப்பு நிரந்தரமாக விலகும். அதற்குப் பிறகு இரண்டரை வருடம் ஏழரை சனி தொடர்ந்தாலும் பெரிய கஷ்டம் ஏற்படாது. ஒளி பிறக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, நல்லவைகள் நடக்கும். இதுவரை இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கும். வியாபாரிகளுக்கு கையில் பணம் நிற்கும்.


Click it and Unblock the Notifications
