கார்த்திகையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், இந்த கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு ராசியும், ராசிநாதனும் குருவின் தொடர்பில் இருக்கக்கூடிய அற்புத மாற்றங்கள் நிறைந்த நல்ல மாதமாக இருக்கும். பெரிய அளவில் சோதனைகள் எதுவும் இருக்காது. எதையும் சமாளிக்கக்கூடிய அமைப்பு. அதிர்ஷ்டம் அருகில் இருப்பது போன்ற எண்ணம் ஏற்படும். பெரிய அளவில் மாற்றமும், முன்னேற்றமும் இருக்கும்.
ஏழரை சனியில் உங்களுக்கு ஜென்மசனி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் ஆரம்பிக்கிறது. ஜென்மசனியில் ஏதாவதொரு வகையில் சங்கடங்கள், பொருளாதாரத் தடைகள், வேலையில் ஏதாவது பிரச்சனைகள் வரும். ஆனால், பெரிய அளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. ராசியும், ராசிநாதனும் வலுவாக இருப்பதால் எல்லா விஷயங்களையும் எளிதாக சமாளிப்பீர்கள்.
குரு, சுக்கிரன் பார்வை
குருவும், சுக்கிரனும் ஒருசேர 5, 7 ஆம் இடங்களில் இருந்து ராசியைப் பார்க்கின்றனர். குரு, சுக்கிரனின் பார்வை இருப்பதால் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். 7 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் திருமணத்தில் இருந்து வந்த தடை அமைப்புகள் நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் விலகும்.
பிள்ளைகள் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள். தூர இடத்தில் இருக்கும் பிள்ளைகள் மீண்டும் வருவதற்கு சம்மதிப்பார்கள். தூர இடத்திற்கு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கக்கூடிய யோகம் உண்டாகும். படிப்படியாக முன்னேற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தைரியம் அதிகரிக்கும்
எல்லா விஷயத்திலும் தைரியம், தெம்புடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செய்வோருக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். ஜென்மசனி நடைபெறுவதால் இப்போது பேராசைப்பட்டு எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது. வேலையை விட்டு தொழில் தொடங்குவது போன்றவற்றில் சிறு சிறு தடைகள், சங்கடங்கள் ஏற்படும். கூட்டுத் தொழிலை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும்.
மேஷ ராசி பெண்களுக்கு கணவரால் ஓரளவுக்கு சந்தோஷம் ஏற்படும். கணவருக்கு சிறு சிறு முன்னேற்றம் ஏற்படும். பெரிய சோதனைகள் இருக்காது. 80 சதவீதம் நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டமாக இந்த கார்த்திகை மாதம் உங்களுக்கு அமையும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் இருந்து புதன் ராசியைப் பார்க்கிறார். மாதம் முழுவதும் ராசிநாதன் வலிமையாக 6 ஆம் இடத்தில் இருக்கிறார். மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து 3 ஆம் இடத்திற்கு கேது நல்லபடியாக மாறி வருகிறார். முயற்சிகள் அனைத்தும் பழிக்கக்கூடிய தன்மை ஏற்படும். 4 ஆம் இடத்தில் குரு மங்கள யோகம் ஏற்படக்கூடிய நிலையில், குரு செவ்வாயின் மூலமாக அம்மா, நிலம், காடு, பண்ணை, தோப்பு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
தொழில் அற்புதமாக இருக்கும். எல்லாவற்றிலும் தைரியமாக நின்று ஜெயிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலையில் சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நர்ஸ், மருத்துவர், மெடிக்கல் ஷாப், லாப் போன்றவை வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
காதலில் வெற்றி
11 இல் சனி, 12 இல் குரு தொடர்பு, 7, 12 க்கு உடையவர் சுபத்துவமாக இருப்பதால் கணவனால் லாபம், மனைவியால் லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய காதல் அமையும். காதலில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. இளைஞர்களுக்கு நல்லவை கூடுதலாக நடக்கும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுக்கு வேலை, படிப்புக்காகச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விசா, பாஸ்போர்ட் கிடைக்கும்.
ராகு கேது 9, 3இல் மாறுவதால் பூர்வீகத்துக்கு திரும்பி வராலம் என்று நினைப்பவர்களுக்கு சிறு சங்கடங்களைக் கொடுக்கும். வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவர்களுக்கு அங்கேயே இருக்கும் அமைப்பைக் கொடுக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் பாதிப்புகளைக் கொடுக்கும். தந்தை நம் பேச்சை கேட்காமல் இருப்பது, ஏதாவது மன வருத்தம் ஏற்படுவது, ஆரோக்கிய குறைபாடு, பொருளாதாதப் பிரச்சனைகள் என ஏதாவதொரு வகையில் சிறு சிறு பாதிப்புகள் வரும். எதிர்பாராத தன வரவு, பண வரவுகள் உண்டு.
வருமானம்
6, 12 ஆம் இடம் சுபத்துவமாக இருப்பதால் கடனை அடைக்கும் அளவுக்கு வருமானம் ஏற்படும். சிலருக்கு வளர்ச்சிக்கான கடன் கிடைக்கும். வீட்டுக் கடன் அடைவதற்கான யோகம் உண்டாகும். சிலருக்கு ஹவுசிங் லோன் கிடைக்கும். வண்டியை மாற்றுவது போன்ற யோகம் உண்டு. சிலருக்கு நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். நட்புகளால் நல்ல நன்மைகள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு நல்லவை கூடுதலாக நடக்கும் காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் செவ்வாயும், குருவும் இருந்தாலும் கூட, 2 ஆம் இடத்தில் சுக்கிரன் அற்புதமான அமைப்பில் இருக்கிறார். 8 ஆம் இடம் சுபத்துவமாக இருப்பதால் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ஏதோ ஒரு வகையில் கடவுளின் பார்வை உங்கள் பக்கம் இருக்கும். விபரீத ராஜயோகம் ஏற்படும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். புகழ் கிடைக்கும். கலைத் திறமையை வைத்துக் கொண்டு வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் வாய்ப்புகள் தேடி வரும். மீடியா துறையில் சாதிக்க வேண்டும், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஏற்படும்.
லாபம் கொட்டும்
பயணங்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். வெளிமாநிலம், வெளிநாடு போன்ற தொலைதூரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து உங்களை நம்பி அனுப்பக்கூடிய வேலைகளை சீக்கிரமே முடித்துக் கொடுப்பீர்கள். பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது.
வரும் சில மாதங்களில் பண வரவு நன்றாக இருக்கும். அதனை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. செலவுகள் செய்யாமல் இருப்பது. மற்றவர்களை நம்பி தொழில் ஆரம்பிப்பதை தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். முதலீடு செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. 2028, 2029 அற்புதமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கவனம்
2028, 2029 சுமாராகத்தான் இருக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கு தடை போன்றவை ஏற்படும். பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கும் மாதமாக இந்த கார்த்திகை மாதம் அமையும். அஷ்டமத்து சனி வருவதற்கு 7 மாதங்கள் இருந்தாலும் அதன் தாக்கத்தை இப்போதிருந்தே அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு 9, 12க்கு உரியவர்கள் நல்ல இடத்தில் உள்ளனர். லாபாதிபதி 11 ஆம் இடத்திலேயே சுபராகி லாபத்தில் இருக்கிறார். 9 ஆம் இடத்தில் ராசிநாதன் மாறி ராசியைப் பார்க்கிறார். பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். காசு, பணத்திற்கு எந்தவித தடையும் இருக்காது. எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பணவரவு அற்புதமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து நல்லவிதமாக பணம் வந்து சேரும். உங்களுடைய இனம், மதத்தைச் சேராத நபர்கள் மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். எல்லாவற்றிலும் முழுமையான நிறைவுகள் இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும்.
பாக்கியம்
எதிர்கால லட்சியங்கள் தீர்மானமாகும். பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவ சிகிச்சைகளால் யோகம் உண்டு. அப்பாவின் உடல்நிலையில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, சொந்த ஊரில் இருக்கும் சில விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.
சொந்த ஊர் சார்ந்த விஷயங்களில் நல்லவை நடக்கும் காலகட்டம். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி அனைத்தும் உங்களுக்கு சாதகமான அமைப்பில் உள்ளது. பெரியளவில் சோதனைகள் கிடையாது. அடுத்தடுத்து வரக்கூடிய அமைப்பில் அஷ்டமசனி வருவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.
பதவி, சம்பள உயர்வு
கெளரவம், அந்தஸ்து கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி கிடைக்கும். அந்தப் பதவியை திறம்படச் செய்யக்கூடிய தன்மை ஏற்படும். வியாபாரத்தில் உயர்வு, தொழிலில் நன்மைகள் கிடைக்கும். தொட்டது துலங்கக்கூடிய தன்மை ஏற்படும். எல்லாவற்றிலும் நல்லவற்றை எதிர்நோக்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.
தனுசு ராசி பெண்களக்கு இதுவரையில் இருந்து வந்த மன அழுத்தம் விலகும். புதிய வேலைகள் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நிம்மதி பெறக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும்.


Click it and Unblock the Notifications
