ஞாபக மறதியால் காட்டுக்குள் தொலைந்த முதியவர்.. உதவி செய்து நெகிழ வைத்த வளர்ப்பு நாய்? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட 69 வயது முதியவர் வனப்பகுதியில் மிஸ்ஸான நிலையில் அவர் செல்லமாக வளர்த்த 'பாசெட் ஹவுண்ட்'இனத்தை சேர்ந்த நாய் மற்றவர்களை அலர்ட் செய்து அவரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

in-us-69-year-old-owner-found-in-forest-after-dog-alerted-rescuers

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்தவர் 69 வயது முதியவர். இவர் அங்குள்ள மலைப்பகுதியில் இருக்கும் விடுதிக்கு ஓய்வு எடுக்க சென்றார். அவர் 'பாசெட் ஹவுண்ட்' இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் பெயர் 'பெக்கி'. அந்த நாயையும் அவர் உடன் அழைத்து சென்றார்.

இந்த முதியவருக்கு ஞாபக மறதி பாதிப்புள்ளது. இதனால் அவர் அடிக்கடி வழிதவறி செல்வது, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்றால் திரும்ப வர முடியாமல் தவிப்பது உள்ளிட்ட பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த 12ம்தேதி விடுதியில் இருந்து வெளியே சென்ற முதியவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது நாய் மட்டுமே விடுதிக்கு வந்தது. மேலும் விடுதி ஊழியர்களை சுற்றி சுற்றி வந்தது. இதனால் ஊழியர்கள் நாயின் உரிமையாளராக முதியவர் மாயமாகி இருப்பதை உணர்ந்தனர். அவர் ஏற்கனவே ஒருமுறை மாயமாகி மீட்கப்பட்டதால் எளிதாக விடுதி ஊழியர்கள் புரிந்து கொண்டனர்.

உடனடியாக தேடுதல் பணி தொடங்கியது. வனத்துறை, போலீசார் இணைந்து தேடி முதியவரை கண்டுபிடித்தனர்.
இதுபற்றி நியூயார்க் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினர் கூறுகையில், '' நவம்பர் 12ம் தேதி இரவு 9 மணியவில் நாய் 'பெக்கி' லேக் பிளாசிடில் உள்ள 'ஒயிட்ஃபேஸ் மவுண்டன்' விடுதிக்கு வந்தது. அந்த விடுதியில் தான் அவர் தங்கியிருந்தார். ஏற்கனவே ஒருமுறை அவர் திடீரென்று மிஸ்ஸானதால் ஊழியர்கள் சுதாரித்து கொண்டனர்.

மீண்டும் நாய் மட்டுமே தனியாக வந்துள்ளது. முதியவர் ஞாபக மறதியால் வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டனர். உடனடியாக நியூயார்க் காவல்துறை மற்றுமு் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 14 வனத்துறை அதிகாரிகளும், 4 காவல்துறை அதிகாரிகளும் தீவிரமாக தேடினர். வனப்பகுதி என்பதால் ட்ரோன், மோப்பநாய் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் முதியவர் கண்டுபிடிக்கப்பட்டார்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+