இவருக்கா ஃபயர் விட்டோம்.. துண்டு தம்பியின் பின்னணி தெரிந்ததும் புலம்பிய நெட்டிசன்கள்!
சென்னை: இஸ்டாகிராம், எக்ஸ் என சமூக வலைத்தளங்களில் டிரெண்டான வீடியோ ஒன்றில், பீகார் இளைஞர் ஒருவர் வியாபாரம் செய்த போது, தனக்கு வியாபாரம் ஆகாதது போல் நாடகமாடி கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும், நீங்க படுகிற கஷ்டத்தை பார்த்து உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக பலரும் கமெண்ட் தெரிவித்து வந்த நிலையில், அவர் யார் என்பது குறித்த தகவல் வெளியானதும், அட போங்கடா.. இவருக்கா ஃபயர் விட்டோம் என புலம்பத் தொடங்கியுள்ளனர். அப்படி என்ன நடந்தது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எப்போதாவது எதாவது ஒரு விஷயம் திடீரென டிரெண்ட் ஆகி ஒட்டு மொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்து விடுகின்றன. சமீபத்தில் ஷெரு பாய் என்று இன்ஸ்டாவை திறந்தாலே ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் வந்த ஏஐ கெட் அப் சிங்கத்தின் வீடியோ வைரல் ஹிட் ஆனது.

வீடியோவை பார்த்து கலங்கி போன நெட்டிசன்ஸ்
இந்த டிரெண்டுக்கு மத்தியில் எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்டவற்றில் இளைஞர் ஒருவர், துணி வியாபாரம் செய்யும் காட்சியும், தன்னிடம் உள்ள துணிகளை யாராவது வாங்க மாட்டார்களா? என்று ஏக்கத்துடன் கண்கலங்கி நின்ற ஒரு வீடியோ அதிகம் பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், யாராவது ஒரு துண்டாவது தன்னிடம் வாங்கிவிட மாட்டார்களா? என்று ஏக்கத்தில் இளைஞர் கலங்குகிறாரே என்று சோகத்துடன் பதிவிட்டனர்.
அந்த இளைஞருக்கு உதவ தான் தயாராக இருப்பதாகவும் அவரது முகவரியை தெரியப்படுத்துங்கள் என்றும் சிலர் ஆதரவுக்கரம் நீட்ட தயராகினர். அதேபோல நெட்டிசன்கள் சிலர், ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கிறது ரொம்ப கஷ்டம், யாராவது இவரை கண்டுபிடித்து உதவி செய்யுங்க என்று சிலர் உருகினர்.
கடைசியில் பெரிய ட்விஸ்ட்
பார்ப்பதற்கே சோகம் தழும்பிய முகத்துடன் அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவை பார்த்து உருகிய நெட்டிசன்களுக்கு பிறகுதான் உண்மை தெரியவந்துள்ளது. அதாவது, சோஷியல் மீடியாவில் சோகமாக கண்ணீர் ததும்ப வீடியோ வெளியிட்ட அந்த இளைஞர், இதே மாதிரியான வீடியோக்களை போட்டு அதிக லைக்ஸ்களையும் வருமானத்தையும் ஈட்டி வந்தது அம்பலமாகியுள்ளது.
சிறிய சிறிய வியாபாரம் செய்வது போல வீடியோவை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்ட அந்த பீகாரை சேர்ந்த அந்த இளைஞர், இன்ஸ்டாவில் அதிக வியூஸ்க்காக இப்படி தன்னை ஏழை போல காட்டிக்கொண்டதோடு, தனது இன்ஸ்டா பக்கத்தில் கூகுள் பேவில் பணம் பெறுவதற்காக கியூஆர் கோடையும் வெளியிட்டு, பலரிடம் பணத்தை கல்லா கட்டியுள்ளார்.
இவனுக்கா ஃபயர் விட்டோம்
தனது இன்ஸ்டா பக்கத்தில் 3 லட்சம் பாலோயர்களை வைத்துள்ள அந்த பீகார் இளைஞர், மிகவும் கஷ்டப்பட்டு வியாபாரம் செய்வது போலவும், தன் மீது இரக்கம் வருவதற்காக, கண்கலங்கிய படி வீடியோ எடுத்து பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்து இருந்து இருக்கிறார். இவரை பற்றிய உண்மை தெரியாமல் இவருக்கு பண உதவி கூட் செய்து இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
இளைஞரை பற்றிய உண்மை வெளிச்சத்துக்கு வந்த பிறகு, ஷாக் ஆன தமிழக நெட்டிசன்கள் பலரும்.. அட இவனுக்கா ஃபயர் விட்டோம் என்று செந்திலை கையெடுத்து கும்பிட்டதற்காக.. கவுண்டமனி கதறுவாரே.. அதேபோல, கமெண்ட்களில் கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
இது ஒரு பாடம்
சமூக வலைத்தளங்களில் பார்க்கும் எதையும் உடனே கண்மூடித்தனமாக நம்பி விடக்கூடாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இன்னும் சில நெட்டிசன்களோ.. எதையும் ஆராயாமல் அப்படியே நம்பும் இன்றைய தலைமுறையினர் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் வருவதை அப்படியே நம்பிவிடக்கூடாது என்று பதிவிட்டு வருகிறார்கள்.





Click it and Unblock the Notifications
