ஈகோ பாக்காதீங்க சிஎம் சார்.. தயவு செஞ்சு வாயை திறந்து பேசுங்க! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றி முருக பக்தர்களின் கோரிக்கையை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்.. திமுகதான் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கியது எனவும், இப்போதாவது முதலமைச்சர் விஜய் பேச வேண்டும். முதலமைச்சருக்கு மிக முக்கியமான விஷயம் பேசுவது தான் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீ த ரீடர்ஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," கடந்த இரண்டு ஆண்டுகளாக முருக பக்தர்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தீபம் ஏற்ற அனுமதி கிடைத்த பிறகும் கூட கடந்த ஆண்டு திமுக முட்டுக்கட்டை போட்டார்கள். இந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழக அரசு தீபம் ஏற்ற போவதில்லை என வாதாடி கொண்டிருந்தார்கள். இதில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளார்கள்.

Annamalai Vijay Thiruparankundram

அண்ணாமலை

இதை தமிழக அரசு பின்பற்றி முருக பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சென்ற அரசு போன்று பிஎன்எஸ் சட்டத்தை பயன்படுத்தி தவெக தீபம் ஏற்ற தடை விதிக்க மாட்டார்கள் என நம்புகிறோம். சென்றாண்டு சென்ற அரசு அந்த தீபத் தூணை சமண துறவிகள் வைத்த தூண் என வாதாடினார்கள். இந்தாண்டு தமிழக அரசு அது பிரிட்டிஸ் அரசு வைத்த மைல் கல் என வாதாடுகிறது. இந்த பொய்யான வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

திமுக

இந்தத் தீர்ப்பு போன்று, இனி நீண்ட காலமாக வரக்கூடிய தீர்ப்பும் முருக பக்தர்களுக்கு சாதகமாக வரும் என நம்புகின்றோம். இதற்கு முன்பு பாஜகவில் இருந்த போதும், தற்பொழுதும் நான் கூறுவதும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதியுங்கள் என்றுதான் கூறுகின்றேன். இதுகுறித்து அமைதி பேச்சுவார்த்தையின் போது இஸ்லாமிய சகோதரர்கள் விட்டுக் கொடுத்தார்கள். திமுகதான் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கியது.

தவெக அரசு

இந்த ஆண்டு தவெக அரசு தேவையில்லாத பஞ்சாயத்து செய்யாமல், தீர்ப்பு வந்திருக்கு அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டதோ அதை அனைவரும் மதிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு எந்த நிலைப்பாடு தவெக எடுக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகும் எதுவும் எடுக்கவில்லை. போன திமுக ஆட்சியிலும், இன்றைய தவெக ஆட்சியிலும் எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை. இந்த இரண்டு அரசும் எல்லா மதத்தையும் சமமாக பார்ப்பது கிடையாது.

முதலமைச்சர் விஜய்

இதே முதலமைச்சர் விஜய் மாற்றம் என்றார். என்ன வெங்காயம் மாற்றம் செய்தார்? 35 சதவீத தமிழக மக்கள் மாற்றி வாக்கு செலுத்தினார்கள். என்ன மாற்றத்தை கொடுத்தார். திருப்பரங்குன்றம் விசயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகள் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இப்போதாவது முதலமைச்சர் விஜய் பேச வேண்டும். முதலமைச்சருக்கு மிக முக்கியமான விஷயம் பேசுவது. முதலமைச்சர் விஜய் திருப்பரங்குன்றம் விஷயத்தில் எந்த பக்கம் இருக்கிறார்? நான் இடது பக்கமும் செல்வேன், வலது பக்கம் செல்வேன், எந்த பிரச்சினையிலும் நான் நிலையாக நிற்க மாட்டேன் என்றால் எப்படி இருக்கும்.

விலைவாசி ஏற்றம்

அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுங்கள் நிறைவேற்றுங்கள் தடைக்கல்லாக அரசு இருக்க வேண்டாம், ஈகோ பார்க்காதீர்கள். கடுமையான விலைவாசி ஏற்றம் சரித்திரத்தில் மக்கள் இது போன்ற விலைவாசி ஏற்றத்தை பார்த்திருப்பார்களா என தெரியாது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காவல் நிலையத்திற்குள் எட்டு முறை மரணங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்ரேஷன் கிடங்கு, டாஸ்மாக்கின் டிஸ்ட்ரிப்பூயூசனையும் பார்க்கிறது. பாருங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாடு இருக்கிறது" என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+