ப்ளஸ் 1 மாணவியுடன் காதல்.. விபரீத முடிவெடுத்த முத்துராஜா! இப்படியா நடக்கனும்? திகுதிகு தூத்துக்குடி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பிளஸ் 1 மாணவி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் அங்கு வந்த காதலன் முத்துராஜா, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குவாதம் முற்றி நிலையில், கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே செபத்தையாபுரம் சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த காசிபாண்டியன் மகன் முத்துராஜா. இவர் அதே பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

tuticorin murder crime

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, செபத்தையாபுரம் முத்துமாலை அம்மன் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில், மாணவியின் படிப்பு முடிந்த பிறகு திருமணம் தொடர்பாக பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, மாணவி வேறு ஒருவருடன் செல்போனில் பேசுவதாக சந்தேகமடைந்த முத்துராஜா, அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முத்துராஜா, மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவியை கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, முத்துராஜா தனது உடலில் கூர்மையான ஆயுதத்தால் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, உயிரிழந்த மாணவியின் உடல் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. ஏரல் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் பின்னணியில் மாணவி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், செபத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+