செஞ்சி சிறுமி மாயம்.. 40 நாளாகியும் க்ளூ இல்லை.. சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் 2 மணி நேர யாகம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 40 நாட்களாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை... இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஏற்பாட்டில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள்ளது. அந் செய்தி நேற்று முழுவதும் வைரலான நிலையில், இந்த யாகம் நடத்தியதற்காக தற்போது சொல்லப்படும் காரணங்களும் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளன. யாகம் ஏன் நடத்தப்பட்டது தெரியுமா?

செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது 7 வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு வழக்கம்போல வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

Sathyamangalam Police Station

சிறுமி மாயம்

மறுநாள் அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினார்கள்.. ஆனால் சிறுமி கிடைக்காததால் சத்தியமங்கலம் போலீசல் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

முதலில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்த இந்த வழக்கு, அக்டோபர் 21-ம் தேதி சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினார்கள்.. பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் சிறுமி எங்கே இருக்கிறார் என்பது குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

நவம்பர் 20-ம் தேதியுடன் சிறுமி மாயமாகி 40 நாட்கள் ஆன நிலையில், அவரை கண்டுபிடிக்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.

சத்தியமங்கலம் சம்பவம்

இதனிடையே, சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரு பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஒருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்னொரு விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள் நடந்து கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.. .

கணபதி ஹோமம்

இப்படிப்பட்ட சூழலில்தான் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள்ளது0.. சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் இந்த ஹோமம் நடைபெற்றுள்ளது. நேற்று காலை ஸ்டேஷனில் நடந்த இந்த பூஜையில் இன்ஸ்பெக்டர் தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார். காவல் நிலையத்தில் பணியாற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசாரும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 2 மணி நேரம் இந்த கணபதி ஹோமம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல் நிலையத்திலேயே யாக குண்டம் அமைத்து ஹோமம் நடத்திய காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன. இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.

கிளம்பிய விவாதம்

ஒருபுறம் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் 40 நாட்களாகியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. மறுபுறம் காவல் நிலைய எல்லைக்குள் அடுத்தடுத்து உயிரிழப்புகளும் விபத்துகளும் நடந்துள்ளன. இந்தச் சூழலில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட கணபதி ஹோமம் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஹோமம் மாவட்ட உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் நடத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குற்ற வழக்குகளில் தடயங்களைத் தேடி விசாரணை நடத்த வேண்டிய போலீசாரே ஸ்டேஷனில் ஹோமம் நடத்தியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் இதுதானா?

ஆனால், இந்த யாகம் நடத்தப்பட்டதற்கு வேறு காரணம் சொல்லப்படுகிறது.. தொடர்ச்சியாக வந்த அதிர்ச்சிகரமான வழக்குகள் மற்றும் பணிச் சூழல் காரணமாகவே, காவல் நிலையத்தில் இந்தக் கணபதி ஹோமம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்ல, இதுபோன்ற உயிரிழப்புகள் மற்றும் வழக்குகள் ஏற்படாமல் இருக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவாகத் தீர்வு கிடைக்கவும் வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஹோமம் நடத்தப்பட்டதாகவும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

மங்களகரமான நிகழ்வை ஆரம்பிப்பதற்கு முன்பாக, வியாபாரத்தில் தடைகள் நீங்கி நன்மை பெற வேண்டும் என்பதற்காகவும், கணபதி ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், யாகம் நடத்தியதற்கு சொல்லப்பட்டுள்ள காரணங்களும் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.

40 நாட்களாகியும் மாயமான சிறுமி ஹேமலதா குறித்த மர்மம் விலகவில்லை. அவரை விரைவில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+