கர்நாடகா பந்த் எதிரொலி.. சத்தியமங்கலம் வழியாக இயங்கும் 14 தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் இன்று பந்த் நடத்தப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் வழியாக கர்நாடகத்திற்கு இயக்கப்படும் 14 தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மைசூர், கொள்ளேகால், பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் செல்லும் TNSTC பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

காவிரி நதிநீர் பங்​கீடு, மேகதாது அணை விவகாரம் ஆகிய​வற்​றில் தமிழகத்​தைக் கண்​டித்​தும், காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடை​பெறும் என கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் தெரிவித்​திருந்தார்.

Mekedatu Karnataka bandh

பள்​ளி, கல்​லூரி​கள், தனி​யார் நிறு​வனங்​கள், வணிக வளாகங்​கள், கடைகள், ஆட்​டோ, வாடகை கார், பேருந்​துகள் ஆகியவை இயங்​காது. அனை​வரும் தாமாக முன்​வந்து இந்த போராட்​டத்​தில் பங்​கேற்க வேண்​டும். எனது தலை​மை​யில் இரு மாநில எல்​லை​யான‌ அத்​திப்​பள்​ளி​யிலும், சுதந்​திர பூங்​கா​விலும் போராட்​டம் நடை​பெறும். இதில் கன்னட ஆதர​வாளர்​கள், விவசாய அமைப்​பு​கள் பங்​கேற்க வேண்​டும்​ என வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

போராட்​டத்தை கைவிடு​மாறு கர்​நாடக முதல்​வர் டிகே சிவகு​மார் கோரிக்கை விடுத்​தார். இதனை மீறி முழு அடைப்பு போராட்​டம் நடத்​தி​னால் அதற்கு மக்​களின் ஆதரவு கிடைக்​காது என டி.கே.சிவகு​மார் தெரி​வித்​தார். இதையடுத்​து, முன்னதாக பந்த்துக்கு ஆதரவு தெரி​வித்த கன்னட ரக் ஷன வேதி​கே, கர்​நாடக தனி​யார் பள்​ளி, கல்​லூரி​கள் கூட்​டமைப்​பு, தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம், ஆட்டோ ஓட்​டுநர்​கள் சங்​கம் ஆகியவை தங்​களது முடிவை மாற்றி கொண்​டுள்​ளன.

இதனால், இன்று நடை​பெறும் பந்த் போராட்​டத்​தால் கர்​நாட​காவில் இயல்பு வாழ்க்கை பா​திக்​கப்​ப​டாது என தெரி​கிறது. அதேசமயம், கர்​நாட​கா, தமிழ்நாடு இடையே போக்​கு​வரத்​து பாதிப்பு ஏற்பட வாய்ப்​பு உள்ளதாகத் தெரிகிறது. எல்லைப் பகுதிகளில் மறியல் நடத்தப்படும் என்பதால், தமிழக அரசு பேருந்துகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற வாகனங்கள் வழக்கம்போல சென்று வருகின்றன.

கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் பந்த் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் வழியாக கர்நாடகத்திற்கு இயக்கப்படும் 14 தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மைசூர், கொள்ளேகால், பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் செல்லும் TNSTC பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+