"திமுக அரசு எடுத்த நிலைப்பாட்டையே தவெக அரசும் எடுக்கவேண்டும்"- முதல்வர் விஜய்க்கு ஜவாஹிருல்லா கடிதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக முந்தைய திமுக அரசு எடுத்த உறுதியான நிலைப்பாட்டை தவெக அரசும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் விஜய்க்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தமிழநாடு முதலமைச்சர் விஜய்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

Jawahirullah Urges CM Vijay to Maintain Firm Stand on Thirupparankundram Issue

அந்தக் கடிதத்தில், நேற்று உச்சநீதிமன்றம் மதுரை திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் நவம்பர் 24 அன்று ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருப்பது சமூக நல்லிணக்கத்தை நாடும் அனைவருக்கும்ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்தக் கல் தூண் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடம்தானா? அது வழிபாட்டுக்குரிய தீபத்தூணா.? அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நில அளவைத் தூணா? அந்த இடம் யாருக்குச் சொந்தமானது? அங்கு தீபம் ஏற்றுவதற்கு நிறுவப்பட்ட மத வழக்காறு ஏதேனும் உள்ளதா? போன்ற அடிப்படையான சட்ட, வரலாற்று மற்றும் சொத்துரிமை சார்ந்த கேள்விகளுக்கு இன்னும் இறுதியான விடை காணப்படவில்லை.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான கண்டறிதல்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டு, அதே சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடான அணுகுமுறையாகவே தோன்றுகிறது.

இந்த அனுமதி ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்றும், இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் உரிமை கோருவதற்கான முன்னுதாரணமாகவோ, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மத வழக்காற்றுக்கான ஆதாரமாகவோ பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தைத் தாண்டி, நடைமுறையில் ஒரு சர்ச்சைக்குரிய மத நடவடிக்கைக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இதேபோன்ற கோரிக்கைகள் எழுவதற்கும் புதிய சர்ச்சைகள் உருவாவதற்கும் வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

திருப்பரங்குன்றம் குறித்த உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவில் பத்தி 11 மற்றும் 12 மிக முக்கியமானவை. தீபம் ஏற்றப்படும் நாள் 24.11.26 சமீபத்துவிட்டது என்றும், இந்த ( தீப) பண்டிகை அன்று நடக்காவிட்டால், பிறகு நடத்துவது பயனில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது.

ஒன்று புராணம் தெரிந்திருக்கவேண்டும் அல்லது உண்மை தெரிந்திருக்க வேண்டும். புராணத்தினபடி, கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் ஏற்றப்படும்.

இந்து மத நம்பிக்கைபடி படைக்கும் கடவுளான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், அகந்தை கொண்டு தன்னையே பெரிய சக்தி என்று கூறி சச்சரவு செய்ய,
அழிக்கும் கடவுளான சிவன், ஜோதி வடிவெடுத்து, இந்த இருவரையும், அடியையும், முடியையும் தேட வைத்து, அவர்கள் அதனை அடைய முடியாமல், அகந்தை அழிந்த நாள் என்று, நமது சகோதர இந்து சமுதாயத்தினர் நம்பும் புராணம் சொல்கிறது.

இதை குறிக்கவே ஆண்டுதோறும், திருவண்ணாமலை குன்றில் தீபம் ஏற்றப்படுகிறது. அங்கே போக இயலாத பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே அகல் விளக்கு ஏற்றுகிறார்கள். மற்ற இடங்களில் தீபம் ஏற்றுவது ஒரு சம்பிரதாயம் தான்.

24.11.2026 அன்று பிரச்சனைக்குட்பட்ட இடத்தில் ஏற்றாமல் போனால், அது தவறிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எப்படி தீர்மானித்தது என்று தெரியவில்லை.

சென்றை ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் அதை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. ஏனெனில் தர்கா வழியாக மட்டுமே அந்தத் தூணை அடைய முடியும். அது தர்காவை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக அமையும். அதனால்தான் முந்தைய திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது.

இதே அணுகுதுறையை தற்போதைய தங்கள் அரசும் உறுதியாக கடைபிடித்து தமிழ்நாட்டின் அமைதியைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+