உளுந்தூர்பேட்டை மேம்பாலத்தில் ஆட்டோ- பைக்- சைக்கிள் மோதல்! ஓட்டுநர் பலி!

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி, பின்னர் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுங்கச்சாவடியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனமும், ஆட்டோவும் நிலை தடுமாறி, சைக்கிளில் சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Ulundurpet

இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் நொறுங்கி முழுமையாக சேதம் அடைந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் கிள்ளனூரைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே கிடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+