செஞ்சி சிறுமி மாயம்.. மீண்டும் செங்கள் சூளை பக்கம் திரும்பிய சிபிசிஐடி! தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமாகி இன்றோடு 41 நாட்கள் முடிகிறது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து 31 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது, சிறுமியின் அழுகுரல் கேட்டதாக கூறிய எதிர்வீட்டு மஞ்சுளாவிடம் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதே போன்று சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரை, செங்கல் சூளை உரிமையாளர், தொழிலாளர்களிடமும் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளதால் புதிதாக துப்பு ஏதும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த மாதம் 12 ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானாள். அக்கம்பக்கத்தில் தேடியும் காணாத நிலையில் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர்.

Gingee Girl missing CBCID turns its attention back to the brick kiln area Intensive investigation underway

மீண்டும் மஞ்சுளாவிடம் விசாரணை

ஆனால் சிறுமியை போலீசாரால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி நிலை என்ன? எங்கே சென்றாள்? என்பது குறித்து தெரியாமல் பெற்றோரும், போலீசாரும் விழிபிதுங்கினர். இந்த சம்பவம் தமிழக அரசியலிலும் விவாதப்பொருளான நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்பேரில் சிபிஐடி போலீசாரும் சிறுமியின் தாய் முதல் கிராம மக்கள், உறவினர்கள், சந்தேகப்படும் நபர்கள் வரை பலரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனாலும் சிறுமி மாயமாகி 41வது நாள் முடிய உள்ள போதும், சிறுமி குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கேமராக்கள் முழுக்க ஆய்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்று சிறுமி காணாமல் போனபோது அழுகுரல் கேட்டதாக கூறிய மஞ்சுளாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

பெங்களூர் சென்று விசாரணை

ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி போலீசாரின் தற்காலிக விசாரணை மையத்தில் வைத்து சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா மற்றும் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மஞ்சுளாவிடம் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் பிறந்தநாள் அன்று கேக் வெட்டிய போது, மஞ்சுளாவின் மகன் சதீஷ் உடன் இருந்துள்ளார்.

இதே போன்று மஞ்சுளாவின் உறவினர் ரேணு பெங்களூரில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதே பகுதியில் காணாமல் போன சிறுமியின் உறவினர்கள் இருப்பதும் தெரியவந்ததையடுத்து ஒருவேளை சிறுமி அங்கு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் பெங்களூர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத் தான் இன்று மஞ்சுளாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

ராஜதுரை, செங்கல் சூளை உரிமையாளரிடம்..

இதேபோன்று இன்று சரித்திர பதிவேடு குற்றவாளியான, ராஜதுரை என்பவரை பரதன்தாங்கள் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் செங்கல் சூளை உரிமையாளர், தொழிலாளர்களிடமும் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்ட சாம்பல் குறித்த தடயவியல் அறிக்கையை சென்னை போலீசாருக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல் சூளை உரிமையாளர்கள், பக்கத்து வீட்டு மஞ்சுளா என சிபிசிஐடி போலீசாரின் விசாரணை அந்த கிராமத்தை சுற்றியே மீண்டும் திரும்பியுள்ளதால் வழக்கில் புதிதாக எதும் துப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+