இது வேற லெவல் கூஸ்பம்ப்ஸ்! காவ்யா - அனிருத் ரிசப்ஷன்! மாஸாக போஸ் கொடுத்த விஜய் - ரஜினி - ஸ்டாலின்.!
சென்னை: காவ்யா - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் சந்தித்து பேசியதோடு ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தற்போதுஇந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகனும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் ஒரே மகளான காவியா மாறனுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கிரீஸ் நாட்டில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண நிகழ்வு நடந்தது.

இதில் மாறன் குடும்பத்தினர், திமுக தலைவர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள ஐடிசி கிரான்ட் சோலா ஹோட்டலில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியா முழுவதிலிருந்தும் அரசியல், திரை பலபலங்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதுமட்டுமில்லாமல் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் ஆகியோரையும் சந்தித்து பேசினார் விஜய். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து பகிரப்பட்டு வருகிறது. மேலும் வேற லெவல் மொமென்ட் என ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
