"என் மனைவியையே கள்ளக்காதல் செய்வீயா".. இளைஞர் முகத்தில் ‘ஆசிட்' ஊற்றிய நபர்.. பெங்களூரில் சம்பவம்
பெங்களூர்: பெங்களூரில் தனது மனைவியுடன் கள்ளக்காதலில் இருப்பதாக வந்த சந்தேகத்தில் அவரது நண்பரின் முகத்தில் ஒருவர் ஆசிட் வீசினார். இதில் அந்த நபரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

பெங்களூர் மாதநாயக்கனஹள்ளி அருகே உள்ள பையண்டஹள்ளி கிராமத்தில் இன்று சசிகுமார் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நவீன் என்பவர் சென்றார்.
திடீரென்று நவீன் தான் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சசிகுமார் முகத்தில் ஊற்றினார். இதில் சசிகுமாரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் அலறி துடித்தார்.
இந்த சமயத்தில் நவீன் அங்கிருந்து ஓடிவிட்டார். சசிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரில் மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் ஆசிட் ஊற்றிய நவீன் என்பவரின் மனைவியும், சசிகுமாரும் நண்பர்கள். ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றியபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இவர்கள் 2 பேரின் மீதும் நவீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது மனைவியும், சசிகுமாரும் கள்ளக்காதலில் இருக்கலாம் என்று நவீன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் சசிகுமாரை பழிவாங்க முகத்தில் ஆசிட் வீசியது தெரியவந்தது.
அதோடு, ஆசீட் வீசியபோது ''என்னுடைய மனைவியுடன் கள்ளக்காதலில் இருக்கிறீயா? உனக்கு இன்று ஒரு பாடம் புகட்டுகிறேன்'' என்று சொல்லி தான் சசிகுமார் மீது ஆசிட் வீசியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள நவீனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications
