பத்திரிகையாளர்களை ‘ஏஜெண்டுகள்’ என விமர்சிப்பதா?.. வைகோவுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசியும், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் 'ஏஜெண்டுகள்' என விமர்சித்தும் நடந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சனியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு அரசியலில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அனுபவம் கொண்ட மூத்த தலைவராக விளங்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவையில் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்திற்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

coimbatore-press-club-condemns-vaiko-for-calling-journalists-agents-demands-apology

வைகோவுக்கு அழகல்ல

கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம், வைகோ ஒருமையில் பேசியதும், கைநீட்டி எச்சரித்ததும் ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர் சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. பல தலைமுறை அரசியல் தலைவர்களுடன் பயணித்தவரும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை நன்கு அறிந்தவருமான வைகோவிற்கு இம்மாதிரியான செயல்பாடுகள் சற்றும் அழகல்ல.

பொதுவெளியில் மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் கேள்வி எழுப்புவது பத்திரிகையாளர்களின் அடிப்படைக் கடமையாகும். கேள்விகள் கடுமையாகவோ அல்லது தர்மசங்கடமாகவோ இருந்தால், அதனைப் பக்குவத்தோடு எதிர்கொள்வதே ஒரு மூத்த அரசியல் தலைவருக்கான அடையாளம். மாறாக, "குறுக்கே பேசுவாயா?", "சவுண்ட் எல்லாம் இங்கு விடக்கூடாது" என ஒருமையில் அதட்டுவதும், ஊடகவியலாளர்களைக் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் "ஏஜெண்டுகள்" என முத்திரை குத்துவதும் அவரது அரசியல் முதிர்ச்சிக்கு ஏற்புடையதல்ல.

வருத்தம் தெரிவிக்க வேண்டும்

பத்திரிகையாளர்களைத் தான் பெரிதும் மதிப்பதாகக் கூறிக்கொண்டே, களத்தில் பணியாற்றும் செய்தியாளர்களின் சுயமரியாதையையும், தொழில் நேர்மையையும் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசுவது முன்னுக்குப் பின் முரணான செயலாகும்.

எனவே, தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தலைவராகப் பார்க்கப்படும் வைகோ, பத்திரிகையாளர்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலான தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தனது அனுபவத்திற்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ற வகையில் ஊடகவியலாளர்களிடம் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+