கார்த்திகை மாதத்தில் எந்தெந்த ராசிகளுக்கு ஜாக்பாட்… 12 ராசிகளுக்கான பலன்கள்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத ராசி பலன் 2026: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற்றுள்ள நிலையில், இந்த கார்த்திகை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம்

​மேஷ ராசினருக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படும். வேலை, நிதிநிலை, முயற்சிகள் விஷயத்தில் கவனம் தேவை. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீணான விவதாங்களைத் தவிர்ப்பது நல்லது.

karthigai-matha-rasi-palan-2026-what-awaits-all-12-zodiac-signs-from-mesham-to-meenam

ரிஷபம்

ரிஷப ராசியினர் தொழில் விஷயத்தில் பார்ட்னர்ஷிப்பில் நிதானம் தேவை. துணையிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. தொழில்முனைவோருக்கு முன்னேற்றம் நிறைநத காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள், கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபடுவோருக்கு புதிய உத்வேகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. ஆரோக்கியம் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை.

கடகம்

கடக ராசியினருக்கு கல்வியில் ஏற்றம் ஏற்படும். குழந்தை விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படும். காதல் இனிக்கும். உங்கள் துணை உங்களைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வார்கள். முதலீடு தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் மிகுந்த கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு குடும்ப விஷயத்தில், சொத்து தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது.

கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது மேன்மையைத் தரும்.

துலாம் ராசி

துலாம் ராசியினர் நிதி சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பொருளாதார நிலையில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு அங்கீகாரமும், சுதந்திரமும் கிடைக்கும். செல்வாக்கு உயரும் காலகட்டம். தனிப்பட்ட வளர்ச்சி ஏற்படும். முக்கிய முடிவுகளை நம்பிக்கையோடு எடுப்பீர்கல். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தலைமைத்துவம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்ப விஷயத்திலும், துணையிடனும் இணக்கமாகச் செயல்படுவது நன்மை பயக்கும். மன அழுத்தம் குறையும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு ஆன்மீகம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். பயணம், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அதிக செலவுகள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புவோர் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மகரம்

மகர ராசியினருக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தொழில் சார்ந்த தொடர்புகள் அதிகரிக்கும். நிதி இலக்கு தொடர்பான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள நபர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் தொடர்பான விஷயத்தால் நண்பர்கள், அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வேலையில் பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். கூடுதல் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

மீனம்

மீன ராசியினருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் நபர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சரியான திட்டமிடல் முன்னேற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+