தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை.. 1,695 நர்ஸ் பணியிடங்கள்! நோ எக்ஸாம்! விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 1,695 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்பவர்களுக்கு மாதம் 21,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்முத்தேர்வின் அடிப்படையில் நர்ஸ்கள் சேர்க்கப்படுவார்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்வி மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை ஆராய்ச்சி மையங்களில் அதாவது சிஇஎம்ஓஎன்சி மையங்களில் காலியாக உள்ள எஸ்என்சியு மற்றும் பிஐசியு பிரிவுகளில், ஸ்டாஃப் நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த நர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி, விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம். மாவட்ட வாரியாக பணியிடங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
அரியலூர் - 13
செங்கல்பட்டு - 57
சென்னை - 130
கோவை - 56
கடலூர் - 89
தருமபுரி - 57
திண்டுக்கல் - 15
ஈரோடு - 31
கள்ளக்குறிச்சி - 17
காஞ்சிபுரம் - 13
குமரி - 29
கரூர் - 21
கிருஷ்ணகிரி - 73
மதுரை - 62
மயிலாடுதுறை - 56
நாகை - 13
நாமக்கல் - 20
பெரம்பலூர் - 40
புதுக்கோட்டை - 14
ராமநாதபுரம் - 26
ராணிப்பேட்டை - 17
சேலம் - 82
சிவகங்கை - 15
தென்காசி - 49
தஞ்சாவூர் - 127
நீலகிரி - 06
தேனி - 33
திருப்பத்தூர் - 54
தூத்துக்குடி - 21
திருச்சி - 85
நெல்லை - 51
திருப்பூர் - 23
திருவள்ளூர் - 26
திருவண்ணாமலை - 60
திருவாரூர் - 59
வேலூர் - 54
விழுப்புரம் - 42
விருதுநகர் - 59 என மொத்தம் 1,695 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜெனரல் நர்சிங் (GNM) முடித்து இருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து இருப்பது கட்டாயம் ஆகும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 04.12.2026 தேதியின்படி 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
ஊதிய விகிதம்:
சம்பளத்தை பொறுத்தவரை ஸ்டாஃப் நர்ஸ் பணியிடங்களுக்கு மாதம் ரூ. 21,000 வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு கிடையாது. ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ஆப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேசிய சுகாதார இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nhm.tn.gov.in-இல் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ, நேரிலோ சமர்பிக்கலாம்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, அதற்கான ஆவணங்களின் நகல்களுடன் சேர்த்து, 04.12.2026 அன்று மாலை 5:00 மணிக்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ப முகவரி மாறுபடும். சென்னையை பொறுத்தவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நகர சுகாதார அலுவலர்/உறுப்பினர் செயலர்,
சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம்,
பொது சுகாதாரத் துறை 3-வது தளம்,
அம்மா மாளிகை ரிப்பன் கட்டிடம்,
ஈவிஆர் பெரியார் சாலை, சென்னை - 600 003.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2026/11/17951788837826.pdf





Click it and Unblock the Notifications
