வேல்முருகன் பார்த்த வேலை.. ஜோசப் விஜய்க்கு அரோகராவா? திருசெந்தூர் கோவில் இனி ஒன்லி பக்தி பாடல் தான்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சூரர் சம்ஹாரம் நிகழ்ச்சியில், வர்ணனையாளர் முருகனுக்கு அரோகரா என்று கூறியதற்கு அடுத்ததாக, முதல்வர் ஜோசப் விஜய்க்கு அரோகரா, அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இனி நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில், இறைபக்தி சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்களை மட்டுமே இடம்பெறச் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஏழு நாட்கள் திருவிழா நடைபெற்றது.

Tiruchendur Temple vijay

திருவிழாவின் 6ஆம் நாளான 15ஆம் தேதியன்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. வீரவாள் புனித வேல் ஆகியவற்றுடன் ஜெயந்திநாதா் கடற்கரைக்கு எழுந்தருளி, லட்சக்கணக்கான பக்தா்களின் வேல்,வேல் என்ற கோஷங்களுடன் சூரனின் தலைகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு சூரசம்ஹாரம் முடிந்தது.

அந்த நிகழ்வை கோவில் சார்பில் நேரலையாக ஒளிபரப்பு நிலையில் நிகழ்ச்சியை பாடகர் வேல்முருகன் குழுவினர் வர்ணனை செய்தனர். அப்போது முருகனுக்கு அரோகரா எனக் கூறிவிட்டு முதல்வர் ஜோசப் விஜய்க்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என கூறினர். இந்த முழக்கத்தால் அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இனி நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில், இறைபக்தி சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்களை மட்டுமே இடம்பெறச் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது நடைபெற்ற பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் பாடகர்கள் எழுப்பிய சில கோஷங்கள் பொதுமக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியதாகவும், இதனால் திருக்கோவிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள், இறைபக்தி பாடல்கள் மற்றும் இறைபக்தி சார்ந்த வசனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், ஆன்மிகத்துக்கு தொடர்பில்லாத கோஷங்கள் மற்றும் தனிநபர் புகழ் பாடல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான செய்திக் குறிப்பை திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், திருச்செந்தூர் கோவில் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இனி பக்தி பாடல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+