இதுதான் டைம்..களத்துல இறங்கிற வேண்டியது தான்! பாஜகவில் சேர்ந்த யுஸ்வேந்திர சஹல்! உடனே பெரிய பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சகல் பாஜகவில் இணைந்திருக்கிறார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு ஓபிசி அணியின் தேசிய செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சகல் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சஹல். தனது அபாரமான சுழற்பந்து வீச்சால் இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடித் தந்தவர். 1990ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

கிரிக்கெட்டில் பிரபலம் ஆவதற்கு முன்பு செஸ் வீரராகவும் அவர் திகழ்ந்தவர். பல போட்டிகளில் பட்டங்களையும் வென்றிருக்கிறார். தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய அவர் டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Yuzvendra Chahal BJP National

டி-20 போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர். சர்வதேச டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பஞ்சு வீச்சாக உள்ளது. ஐபிஎல் தொடரிலும் பல்வேறு அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் சாஹல் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது உள்நாட்டு போட்டிகளில் ஹரியானா அணிக்காக விளையாடி வரும் சாஹல், இங்கிலாந்தின் இங்கிலாந்தின் கென்ட் மற்றும் நார்தாம்ப்டன்ஷையர் அணிகளுக்காகவும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்றிருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசியல் களத்திலும் குதித்திருக்கிறார். பாஜகவில் சேர்ந்த உடனேயே அவருக்கு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாஜக ஓபிசி அணையின் தேசிய தலைவர் அமர்பல் மவுரியாவை சந்தித்து பேசி இருந்த நிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்ததோடு கட்சியின் ஓபிசி மோர்ச்சா தேசிய செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு யுஸ்வேந்திர சஹல்," பாஜக குடும்பத்தில் தனக்கு இடமும் மரியாதையும் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசிய தலைவர் அமர்பால் மௌரியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதை அடுத்து அரசியல் தலைவர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இதனிடையே யுஸ்வேந்திர சஹலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் ஓபிசி மோர்ச்சா தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அந்த கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜோகன் மோகன், ஒடிசாவைச் சேர்ந்த மம்தா மொஹந்தா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்கம் லால் குப்தா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாபன்ராவ் ராவ்ஜி சவுத்ரி, டெல்லியைச் சேர்ந்த சத் பிரகாஷ் ராணா, பீகாரைச் சேர்ந்த அர்ஜுன் சஹ்னி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீதா பல்வந்த் பிந்த் ஆகியோர் அந்த கட்சியின் ஓபிசி அணி தேசிய துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர.

அதேபோல டெல்லியைச் சேர்ந்த கஜேந்திர யாதவ், கர்நாடகாவைச் சேர்ந்த பிரமோத் மாத்வராஜ், சத்தீஸ்கரைச் சேர்ந்த லலித் சந்திரகர் பொது செயலாளராகவும், 37 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த டி வரதராஜனுக்கும் தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த சரிதா ஜாங்கிட், தெலங்கானாவைச் சேர்ந்த கடகாஞ்சி ரமேஷ், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வைபவ் பன்வார், பீகாரைச் சேர்ந்த பீம் குமார் சாஹு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆகியோரும் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+