பெரிய இடத்துல கை வச்சுட்டாய்ங்க பரமா! FBI தரவுத்தளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள்? அலறும் அமெரிக்கன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்ற எஃப்பிஐ பராமரித்து வந்த முக்கியமான குற்றவியல் தகவல் தரவுத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் இந்த தகவல் தொடர்பாக எஃப்பிஐ விசாரணையை தொடங்கி இருக்கிறது.

அமெரிக்காவின் மிக முக்கிய புலனாய்வு அமைப்புகளில் ஒன்று எஃப்பிஐ. மத்திய புலனாய்வுத் துறை என அழைக்கப்படும் இது அமெரிக்காவில் குற்றவாளிகளை அடையாளம் காண்பது, தலைமறைவாக உள்ளவர்களை தேடுவது, காணாமல் போனவர்களை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு காவல்துறை நடவடிக்கைகளுக்கு நேஷனல் கிரைம் இன்பர்மேஷன் சென்டர் என்ற தகவல் தரவு தளத்தை பராமரித்து வருகிறது.

FBI Database Hack

இதன் முழு கண்ட்ரோலும் எஃப்பிஐ வசம் தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த தளத்தில் தலைமறைவான குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், குற்ற பின்னணி விவரங்கள், திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றின் தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்.

அமெரிக்காவின் லோக்கல் போலீஸ் தொடங்கி உயர் சட்ட அமலாக்க அமைப்புகள் வரை இந்த தரவு தளத்தை தான் பயன்படுத்தி வருகின்றன. இப்படி அதி முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் அடங்கிய இந்த தரவுத்தளத்தை ஹேக்கர்கள் கைப்பற்றி தகவல்களை திருடி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சைபர் தாக்குதலால் எவ்வளவு தகவல்கள் திருடப்பட்டன? என்னென்ன விவரங்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றிருக்கலாம் என்ற தகவல்கள் தற்போது கிடைக்கவில்லை.

முதலில் சர்வதேச செய்தி நிறுவனமான சிஎன்என் தான் விவகாரத்தை வெளியிட்ட நிலையில் எஃப்பிஐ விசாரணை நடத்தி வருவதை அசோசியேட்டட் பிரஸ் நிறுவனமும் உறுதி செய்து இருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் குறித்து எஃப்பிஐ அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனிடைய இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் ஃபாக்ஸ் நியூஸ் கேட்டபோது, அதைப்பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன் இது நல்ல விஷயம் அல்ல" என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் இணைய சேவைகள் சமீப காலமாக பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளுக்கு உட்பட்டு வருகிறது. இதற்கும் சைபர் தாக்குதல்கள் தான் காரணமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கணினி நெட்வொர்க்களை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்வது போன்ற வழக்கமான தொழில்நுட்ப பணிகளால் தான் இந்த சேவைகள் தடைபட்டதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது எஃப்பிஐ தரவுத்தளத்தில் திருடப்பட்டுள்ளதாக கூறப்படும் ஹேக்கிங் சம்பத்துக்கும் ஏற்கனவே ஏற்பட்ட கோளாறுகளுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் இல்லை. ஏற்கனவேஎஃப்பிஐ இதேபோல பல முறை சைபர் தாக்குதல் முயற்சிகளை சந்தித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் எஃப்பிஐயின் வேலைவாய்ப்பு இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

சைனி ஹன்டஸ் என்ற ஹேக்கர் குழு எஃப்பிஐ ஊழியர்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களை தகவல்களை திருடியதாக கூறியிருந்தது. இதே போல கடந்த மார்ச் மாதமும் எஃப்பிஐ இன்டர்னல் கம்ப்யூட்டர் அமைப்பில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கண்டறியப்பட்டது. அந்த நெட்வொர்க்கில் தான் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான ரகசிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் தற்போது குற்றவியல் தகவல்கள் அடங்கிய தேசிய தரவுத் தளமெ ஹேக்கிங் முயற்சிக்கு இலக்காகி இருக்கலாம் என்ற தகவல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தகவல்கள் திருடப்பட்டனவா? எவ்வளவு தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+