இப்படியும் நடக்குமா? கண்ணை மறைத்த கள்ளக் காதல்.. தாயை கொன்று தாலியை அறுத்த சரண்யா! அம்பலமான உண்மை!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பணத்திற்காகவும் நகைக்காகவும் உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு தாயையே மகள் கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், கொலை செய்து விட்டு தாயின் நகைகளை காதலனிடம் ஒப்படைத்துவிட்டு நாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் அம்பலமான நிலையில், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த ரவி கீதாவின் மூத்த மகள் சரண்யா (35) சென்னை சேர்ந்த லோகேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து வசித்து வந்தார். தம்பதியர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகேஷ் இறந்து விட்டார்.

இதனால் கணவனை இழந்து வாடும் தனது மூத்த மகளை தாய் கீதா தென்கடப்பந்தாங்கள் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு வந்துவிடுமாறு கூறியுள்ளார். அதன் பிறகு தனது தாய் வீட்டில் தனது இரண்டு பிள்ளைகளுடன் சரண்யா வசித்து வந்துள்ளார்.
இதனிடையே தாய் கீதா வீடு கட்டுவதற்கு லோன் வாங்கிய காரணத்தால் கலெக்சன் ஏஜென்டாக அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (34) என்பவர் பணம் வசூலிக்க வருவது வழக்கமாம். அப்போது ரண்யாவிற்கும் சரண்ராஜ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறிய பின்னர் இருவரும் வெளியே உல்லாசமாக சுற்றுவது வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனை தாய் கீதா கண்டித்துள்ளார்.
மேலும் சரண்யா தனது தாய்க்கு தெரியாமல் சிறுக சிறுக நகைகளை அடகு வைத்து காதலுடன் செலவழித்து வந்துள்ளார். சம்பவ நாளான 19-ம் தேதி அன்று காலை தாய் கீதாவிடம் சரண்யா பணம் கேட்டுள்ளார். இதற்கு கீதா பணம் தரவில்லை என மறுத்ததால், நான் உயிருடன் இருக்கும் வரை நீ ஆசைப்படுவது நிறைவேறாது என மகளை கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மகள் சரண்யா தனது தாய் என்று கூட பாராமல் கடுமையாக தாக்கியதோடு கயிறால் கீதாவின் கழுத்தை நெறித்து சரண்யா கொலை செய்துள்ளார். இதன் பிறகு கீதா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின், கொலுசு, கம்பல் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டு தனது காதலன் சரண்ராஜ் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்..
அதன் பின்னர் தனது தாயின் நகைகளை சரண்ராஜ்விடம் கொடுத்துவிட்டு வீட்டில் யாரோ கொள்ளை அடித்தது போல் நாடகத்தை அரங்கேற்று விட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையிலான போலிசார் கொண்ட குழு மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதில் காதலன் சரண்ராஜ் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் இறந்து போன கீதாவின் நகை கொலுசு கம்பல் சரண்ராஜ் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.




Click it and Unblock the Notifications
