அனிருத் ரிசெப்ஷனில் விஜய் - சங்கீதா.. அடுத்த நிமிஷம் நடக்காத விஷயம்! திரிஷா வராததும் பேசுபொருள்
சென்னை: அனிருத் - காவியா ரிசப்ஷன் நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 21) சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள் என பலரும் ஒரே இடத்தில் சங்கமித்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் வந்ததும், அவருக்கு பிறகு அவருடைய மனைவி சங்கீதா தனியாகவே வந்திருந்தார். அது விவாதம் ஆகி வருகிறது.

அனிருத் காவியா ரிசப்ஷன்
முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சிக்கு தனியாக வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றார். அவருடன் அவருடைய தோழி திரிஷா வரவில்லை என்பது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்தது. ஏற்கனவே சமீப காலமாக சில நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொள்வதை வைத்து நேற்று காலையில் இருந்து ரசிகர்கள் திரிஷா மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு இந்த விஜய்யுடன் வந்துவிடக்கூடாது என்று கமெண்ட் போட்டு வந்தனர்.
ரசிகர்களின் வருத்தம்
இது திரிஷா கண்களில் பட்டுவிட்டதோ என்னவோ! இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. முதல்வர் விஜய் மட்டும் தனியாக வந்து மணமக்களை ஆசீர்வதித்து விட்டு கிளம்பிவிட்டார். அதற்கு பிறகு தேமுதிக எம்எல்ஏ சுதீஷ் வீட்டு நிகழ்ச்சியிலும் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் தனியாக வந்து போன, சில மணி நேரத்தில் அவருடைய மனைவி சங்கீதாவும் தனியாக வந்து மணமக்களை வாழ்த்தி இருந்தார். திரிஷா வரவில்லை என்று சந்தோசமாக இருந்த ரசிகர்களுக்கு சங்கீதா தனியாக வந்தது வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியாக வந்த சங்கீதா
ஒரே நிகழ்ச்சிக்கு இருவரும் வந்திருக்கிறார்கள், சில கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வந்திருக்கலாமே என்று பலரும் கமெண்ட்களில் புலம்புகின்றனர். ஏற்கனவே சங்கீதா முதல்வர் விஜய் மீது விவாகரத்து வழக்கு கொடுத்திருந்தார். சில மாதங்களுக்கு பிறகு திடீரென அந்த வழக்கை வாபஸ் வாங்கி விட்டார். இதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் தனித்தனியாக வந்திருப்பதை பார்க்கும்போது இன்னும் பிரிந்து தான் இருக்கிறார்களா? என்று கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

திரிஷா பதில்
அதேபோல, த்ரிஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத காரணம் கூட சங்கீதா இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதால் தேவை இல்லாத சலசலப்பை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் தான் எந்த முடிவா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கான உண்மையான ரீசன் சம்பந்தப்பட்ட திரிஷாவிற்கு மட்டும்தான் தெரியும். அதை பற்றி சோசியல் மீடியாவில் ஏதேனும் கருத்து தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். காரணம் தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு சில நேரங்களில் திரிஷா பதில் சொல்லி இருக்கிறார், அதேபோல இப்போ கூட இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
