தேமுதிக சுதீஷ் மகள் ரிசப்ஷனில் சலசலப்பு..நடிகை தேவயானியை தள்ளி விட்டார்களா? கடுப்பாகி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண நிகழ்ச்சி என்றாலே பிரபலங்கள் பலரும் அழகாக அலங்கரித்து கொண்டு குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்துவது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இப்படி மகிழ்ச்சியாக நடைபெறும் கூட்டங்களில் கூட நெரிசலால் ஏற்படும் சின்ன சின்ன சம்பவங்களே பெரிய பேசுபொருளாகி விடுகின்றன. அப்படித்தான் தற்போது நடிகை தேவயானி தொடர்பான ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் கவனம் இருந்து வருகிறது.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தில் ஒருவரான தேமுதிக எம்எல்ஏ சுதீஷ் மகள் ஜானுவின் திருமண வரவேற்பு நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில், முதல்வர் விஜய் முதல் பல அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். பிரேமலதா விஜயகாந்த் முன்னின்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை தேவயானி தனது இரண்டு மகள்களுடன் வந்திருந்தார்.

Devayani LK Sudhish Premalatha Vijayakanth DMDK

எளிமையாக வந்த தேவயானி

பொதுவாக பெரிய திருமண வரவேற்பு என்றாலே பிரபலங்கள் தங்களுக்கென ஒரு தனி லுக், ஆடை அலங்காரம் என வருவார்கள். ஆனால் தேவயானி எப்போது போல மிகவும் எளிமையாக தனது மகள்களுடன் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆடம்பரமும் இல்லாமல் குடும்பத்திருந்த வந்திருந்த அவருக்கு அங்க ஏற்பட்ட கூட்ட நெரிசல்தான் சிரமமாக மாறியதாக கூறப்படுகிறது. தேவயானி மேடைக்கு போகும்போது சிலர் தேவயானியை இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.

Devayani LK Sudhish Premalatha Vijayakanth DMDK

கோபத்தில் கிளம்பிய தேவயானி

திருமண நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பலரும் மணமக்களை பார்க்கவும், பிரபலங்களுடன் போட்டோ எடுக்கவும் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக வெளியான வீடியோவில் தெரிகிறது. அதனால் கடுப்பான தேவயானி அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்து வெளியேற முயற்சி எடுப்பதும், "வழி விடுங்க" என்று கோபமாக கூறியபடி கிளம்புவதும் இருக்கிறது. அவருடைய இரண்டு மகள்களுமே சோகமாக அங்கிருந்து அம்மா பின்னாடியே போகின்றனர். இந்த வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Devayani LK Sudhish Premalatha Vijayakanth DMDK

வரவேற்பு நிகழ்ச்சியில் சலசலப்பு

அதான் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது இரண்டு மகளுடன் சந்தோஷமாக வந்தவர் இப்படி கூட்டத்தில் சிரமப்பட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக பெரிய அளவில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போதுமான ஏற்பாடுகள் இருக்க வேண்டாமா? யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் வழி ஏற்படுத்தி இருக்க வேண்டாமா? என்று விமர்சனங்களும் இருந்தது.

தேவயானியை யார் தள்ளினார்கள்? அது திட்டமிட்ட செயலா? அல்லது கூட்ட நெரிசலில் ஏற்பட்டதா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் அவர் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பும் வீடியோ மட்டும் இப்போ சோசியல் மீடியாவில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் குடும்ப திருமண நிகழ்ச்சியில் இப்படி ஒரு சலசலப்பு ஏற்பட்டது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+