ஓவைசியை பார்த்ததும் திடீரென சுற்றிய உபி போலீஸ்.. ஒரு நொடியில் பெருங்குழப்பம்! கடைசியில் என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்றிருந்த மஜ்லீஸ் கட்சியின் அசாதுதீன் ஓவைசியை உச்ச நீதிமன்ற நீதிபதி என்று தவறாக நினைத்து கொண்ட போலீசார், அவருக்கு 'கார்டு ஆஃப் ஹானர்" மரியாதை கொடுத்தனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவராக உள்ளவர் அசாதுதீன் ஓவைசி. ஹைதராபாத் எமம்பியான ஓவைசி கடந்த சில ஆண்டுகளாகவே தனது கட்சியை தெலுங்கானாவை தாண்டி மற்ற மாநிலங்களில் வலுப்படுத்தும் முயற்சிகளில் உள்ளார். அதன் ஒரு பகுதியாகவே அடுத்தாண்டு நடக்கும் உத்தர பிரதேச தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

Asaduddin Owaisi Uttar pradesh

கூட்டணி

இதற்காக அவர் ஆசாத் சமாஜ் கட்சி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணிக்காக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருவரும் சஹாரன்பூர் மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அங்கு உத்தர பிரதேச தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையே சஹாரன்பூர் சர்க்யூட் ஹவுஸுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் வருகை தரவிருந்ததால், அவருக்கு 'கார்டு ஆஃப் ஹானர்" மரியாதை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய போலீசார் காலையிலேயே அங்கு சென்றிருந்தனர். ஆனால், நீதிபதி வருவதற்கு முன்பாக ஓவைசி எதிர்பாராத விதமாக சர்க்யூட் ஹவுஸுக்கு வந்துள்ளார். அவரது வருகை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

மரியாதை

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஓவைசியை நீதிபதி என தவறாக அடையாளம் கண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு 'கார்டு ஆஃப் ஹானர்' எனப்படும் அணிவகுப்பு மரியாதையை வழங்கினர். ஓவைசிக்கு முதலில் என்ன நடக்கிறது என புரியவில்லை. ஆனாலும், போலீசார் அணிவகுத்து நின்று சல்யூட் அடித்தபோது, ஓவைசியும் நின்றபடி அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது. இதையடுத்து இது குறித்து சஹாரன்பூர் போலீசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் கிடைக்கும் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

குழப்பம்

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியும், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் இணைந்து சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே இரு தலைவர்களும் சஹாரன்பூரில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்த வந்திருந்தனர்.

பொதுவாக குடியரசுத் தலைவர், ஆளுநர், நீதிபதிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அரசு முறை நிகழ்ச்சிகளின்போது வழங்கப்படும் மரியாதையே 'கார்டு ஆஃப் ஹானர்' எனப்படுகிறது. இத்தகைய மரியாதையை வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில், போலீசார் செய்த இந்தத் தவறு தற்போது சர்ச்சையாகியுள்ளது.

உபி தேர்தல்

உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு பக்கம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக 3வது முறையாக ஆட்சியை அமைக்க களமிறங்குகிறது. இன்னரொ பக்கம் அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மூன்றாவது அணியாகவே ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியும், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் களமிறங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+