ரயில் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. பெர்த் லிமிட் இனி கிடையாது! குழுவாக பயணிப்பவர்களுக்கு யோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் திருமணம், சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா போன்ற காரணங்களுக்காக குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு அதிரடி மாற்றம் ஒன்றை தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இனி பல்க் டிக்கெட்டுகள் புக்கிங்கின் போது பெர்த்களுக்கு எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. ரயில்வே கொண்டு வந்து இருக்கும் இந்த புதிய மாற்றங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்கள் தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் ரிஷர்வேஷனில் முக்கிய மாற்றம் ஒன்றை ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதாவது, குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நிர்ணயிக்கப்பட்டு இருந்த பெர்த் லிமிட் விதிகளில்தான் மாற்றமானது கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, குழு டிக்கெட்டின் போது படுக்கை வசதி சீட்களுக்கு எந்த வரம்பும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Train railway train ticket booking ticket booking

குழுவாக பயணிக்கும் பயணிகளுக்கு பொருந்தும்

தென்மேற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடாகவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மேற்கு ரயில்வேக்கு கீழ், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா என பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய சுற்றுலாப் பகுதிகளை இணைக்கும் வகையில், பல ரயில்கள் இந்த வழித்தடங்களில் உள்ளன. இந்த சூழலில்தான் மேற்கண்ட முக்கிய அறிவிப்பினை ரயில்வே வெளியிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழு சுற்றுலாப் பயணிகள், கூட்டு குடும்பமாக ஒன்றாக பயணிப்பது போன்ற பயணங்கள் செய்பவர்களுக்கு இந்த மாற்றம் பயனளிக்கும். அதாவது, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஒன்றாக பயணிக்கும் பயணிகளுக்கும், கல்வி சுற்றுலா, ஆன்மீக யாத்ரீக பயணம், விளையாட்டு போட்டிகள், கலாசார நிகழ்வுகள் போன்றவற்றிற்கு குழுவாக பயணிக்கும் பயணிகளுக்கு இந்த விதிகள் மாற்றம் பெரும் பயனளிக்கும்.

வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது

புதிய வழிகாட்டுதல்களின்படி, தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மற்றும் ரயில் நிலைய மேலாளர்கள் ஆகியோருக்கு, பெர்த் எண்ணிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு இன்றி குழு முன்பதிவுக்கு அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, குழு முன்பதிவுக்கு ஒதுக்கப்படும் மொத்த பெர்த்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஒன்றாகப் பயணம் செய்ய முடியும். தங்களுக்கு பெர்த் ஒதுக்கப்படாதா என்ற அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து வகையான வகுப்புகளுக்கும் இந்த விதி பொருந்தும். அதாவது, ஏசி, சாதாரண படுக்கை வசதி என அனைத்து வகையான வகுப்புகளுக்கும் பொருந்தும். இந்த புதிய வசதியை உண்மையான பயணிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக முடக்கி வைப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்றும் ரயில்வே அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பயணிகள் எப்போது இந்த முன்பதிவை செய்ய முடியும்?

முன்பதிவு காலம் தொடங்கிய நாளில் இருந்தே பல்க் டிக்கெட்டுகளை பயணிகள் செய்ய முடியும். ஆனால், வழக்கமான முன்பதிவு 8 மணிக்கு தொடங்கும். இந்த பல்க் டிக்கெட் முன்பதிவை பொறுத்தவரை 9 மணிக்கு தொடங்கும். பல்க் டிக்கெட் புக் செய்து பயணம் செய்ய விரும்புவர்கள், அதற்கான உரிய ரயில்வே அதிகாரியிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

பல்க் அல்லது குரூப் ரிஷர்வேஷனுக்கு விண்ணப்பிக்கும் பயணிகள், தங்கள் பயணம் செய்யும் நோக்கத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். பயணிகளின் விவரம், வயது, பாலினம், முகவரி, பயணம் செய்யும் நோக்கம் ஆகியவற்றை அவசியம் கொடுக்க வேண்டும். இந்த விவரங்களை வழங்க மறுக்கும் பயணிகளின் முன்பதிவு கோரிக்கை ஏற்கப்படாது. தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட இந்த விதிகள் மாற்றம் ரயில்வேயின் அனைத்து மண்டலங்களுக்கும் பொருந்துமா? இல்லையா என்பது பற்றிய தெளிவான விவரங்கள் தற்போது வரை இல்லை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+